பாரதியார்

பெயர்கள்: 

இயற்பெயர் :  சுப்பிரமணிய பாரதி
மகா கவி
தேசிய கவி
பாட்டுக்கோர் புலவன்
புதுக்கவிதையின் தந்தை
தற்கால இலக்க்யத்தின் விடிவெள்ளி

பிறந்த இடம்: தூத்துக்குடி,எட்டயபுரம்

சிந்துக்கு தந்தை, நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா என பாரதிதாசன் இவரை பாரட்டியுள்ளார்

எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார்

மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.


பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்-----

கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்

இயற்றிய நூல்கள்:

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சுயசரிதை (பாரதியார்)
தேசிய கீதங்கள்
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திசூடி
பொன் வால் நரி

ஜி.யு.போப்

கனடா நாட்டை சேர்ந்தவர்

இயற்பெயர்: ஜார்ஜ் உக்லோ போப்

திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.

தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.


கைந்நிலை

கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று.

இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. 

இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர்.

ஏலாதி

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே.

ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.


இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

முதுமொழிக்காஞ்சி

மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குப் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது.

இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

 பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

  1. சிறந்த பத்து
  2. அறிவுப் பத்து
  3. பழியாப் பத்து
  4. துவ்வாப் பத்து
  5. அல்ல பத்து
  6. இல்லைப் பத்து
  7. பொய்ப் பத்து
  8. எளிய பத்து
  9. நல்கூர்ந்த பத்து
  10. தண்டாப் பத்து

சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. 

எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.

பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, 

இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.

காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.

பழமொழி நானூறு

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். 

சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. 

இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.

சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது

பழமொழி நானூறில் காணப்படும் வரலாற்றுக்குறிப்புகள்

தூங்கும் எயிலும் தொலைத்தலால் (பா.156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைக் குறித்தது)

கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (பா.243) (மனு நீதி கண்ட சோழன்)

தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பா.77) (பொற்கைப் பாண்டியன்)

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பா.75) (குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)

பாரி மடமகள் பாண்மகற்கு..... நல்கினாள்(பா.382) (பாரியின் மகள்)

நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பா.7) (கரிகால் சோழன்)

சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த 

இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)


அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).

ஆசாரக்கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல்

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.


பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல்

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.

101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.


இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது.

153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். 

கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார்.இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.

1. குறிஞ்சி 1-31 வரை : 31 பாடல்கள்
2. நெய்தல் 32-62 வரை : 31 பாடல்கள்
3. பாலை 63-92 வரை : 30 பாடல்கள்
4. முல்லை 93-123 வரை :31 பாடல்கள்

5. மருதம் 124-153 வரை :30 பாடல்கள்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது.

அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

ஐந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.


இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.