பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும்
சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.
சங்கம்
மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர்
அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
இதன் ஒவ்வொரு பாட்டின்
இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.
சங்க காலத்தினை பற்றி இந்நூல்
அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
பழமொழி நானூறில் காணப்படும் வரலாற்றுக்குறிப்புகள்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் (பா.156) (தூங்கெயில் எறிந்த
தொடித்தோட் செம்பியனைக் குறித்தது)
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (பா.243)
(மனு நீதி கண்ட சோழன்)
தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பா.77)
(பொற்கைப் பாண்டியன்)
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பா.75)
(குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)
பாரி மடமகள் பாண்மகற்கு..... நல்கினாள்(பா.382) (பாரியின்
மகள்)
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பா.7)
(கரிகால் சோழன்)
சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (பா.240) (தீயினால்
கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த
இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (பா.381) (தம் புகழைப்
பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).