பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம்
நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து
விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை.
எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர்
பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான்
என்பவர்.
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு
வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி,
நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள்
மூலம் நீதியைப் போதித்து,
இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.
காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார்.
இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள்
'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.