சாளுக்கியர்


  • சாளுக்கியர் என்பவர்கள் இந்தியாவின் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர்.  
  • சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர்
  • முதலாம்புலிகேசி கதம்பர் மரபினரை வெற்றிகொண்டு சாளுக்கியப் பேரரசை நிறுவினான். இவனுக்கு சத்யாச்சரியன், வல்லபன், தர்மமகாராஜன் போன்ற பட்டங்கள் இருந்தன.


  • சீன யாத்திரிகர் ஹியூன் சங்க் என்பவர் சாளுக்கிய வம்ச ஆட்சியில் இந்தியா வந்தார்.
  • இந்திய வரலாற்றில் சிறந்த அரசர்களில் ஒருவனான, இரண்டாம் புலிகேசியின் (கி.பி 609 - 642) ஆட்சியின் போது வேகமாக முன்னணிக்கு வந்தனர்.
  • இரண்டாம் புலிகேசியின்  இயற்பெயர் எரேயா
  •  இவன் காலத்தில், தெற்கே பல்லவ நாட்டின் வடக்கு எல்லை வரை விரிவடைந்திருந்தது சாளுக்கியப் பேரரசு.மகேந்திரவர்மனின் காஞ்சியை முற்றுகையிட்டான்
  • இரண்டாம் புலிகேசி வடக்கில், ஹர்சவர்தனரை நர்மதை நதிக்கரையில் தோற்கடித்து அவனது தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுத்தான்.
  • தென்கிழக்குத் தக்காணத்தில் விஷ்ணுகுண்டினர்களையும் தோற்கடித்தான்.
  • ஆனாலும், பல்லவன் நரசிம்மவர்மன், புலிகேசியைத் தோற்கடித்து அவன் தலைநகரான வாதாபியையும் சிறிது காலம் ஆக்கிரமித்திருந்தான்.
  • இவர்கள் தலைநகரம் வாதாபி என்பதால் வாதாபி சாளுக்கியர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
  • இரண்டாம் புலிகேசிக்குப் பின், உட் பூசல்களால் சாளுக்கியர் சிறிது காலம் வீழ்ச்சியுற்று இருந்தனர். இரண்டாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் மீண்டும் முன்னணிக்கு வந்தனர். இவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவனைத் தோற்கடித்து அவன் தலைநகரமான காஞ்சியையும் கைப்பற்றினான்
  • இரண்டாம் விக்கிரமாதித்தனின்மிக முக்கியச் சாதனைகள் என்றால் மூன்று சந்தர்ப்பங்களில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது, முதல் முறை இவன் இளவரசனாக இருந்தபோதும், இரண்டாம் முறை இவன் பேரரசனான ஆனபிறகும், மூன்றாம் முறை இவனது மகன் மற்றும் முடிக்குரிய இளவரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்தலைமையின் கீழ் என காஞ்சி வெற்றிகொள்ளப்பட்டது. இதே தகவலை விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் வேறு கன்னட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது
  •  இரண்டாம் விக்ரமாதித்தன் அரசிகள் லோகதேவி, திரிலோகதேவி ஆகியோர் மூலம் பிரபலமான விருபாக்ஷா கோயில் (லோகேஸ்வரா கோயில்), மல்லிகார்ஜுன கோயில்(திரிலோகேஸ்வரா கோயில்) ஆகிய கோயில்கள் பட்டடக்கல் என்ற பகுதியில் கட்டப்பட்டதாகும். 1987 ஆம் ஆண்டில் இந்த கோயில்கள் கொண்ட நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
  • விருபாக்ஷா கோயில் காஞ்சி கைலாச நாதர் கோயிலைபோல் கட்டப்பட்டது
  •  இராஷ்டிரகூடர்களின் எழுச்சியைத் தொடர்ந்து வாதாபிச் சாளுக்கியர் தாழ்ச்சியுற்றனர்.
  • இரண்டாம் புலிகேசியின் அவைபுலவர் ரவிகீர்த்தி ஐஹோலே கல்வெட்டுக்களை படைத்தார்.
    ஐஹோலேவில் 70க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டினர் எனவே ஐகாலே "இந்திய கோயில் கட்டிடக்கலையின் தொட்டில்" என சிறப்பிக்கப்படுகிறது
  • இரண்டாம்கீர்த்திவர்மன் அல்லது ரஹப்பா (ஆட்சிக்காலம்கி.பி.746 - 753 ) என்பவன் சாளுக்கிய மரபின் ஆட்சியாளன் ஆவான். இவன் தனது தந்தை விக்ரமாதித்னுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்றவன். இவனது பரந்த ஆட்சி அதிகாரத்தை இராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் 
  • பாண்டியன் பராங்குசன் தனது எல்லையைவிரிவாக்கும்பொருட்டு கங்கநாட்டின் மீது படையெடுத்து வந்தான். கங்கமன்னன் சிறீபுருசன் சாளுக்கியரின் மேலாட்சியை ஏற்றிருந்ததால் இவனுக்கு ஆதரவாக கீர்த்திவர்மனும் தனதுபடைகளுடன் போர்க்களத்திற்கு வந்தான். கி.பி.740 அல்லது 741ல் காவிரிக்கரையில் வேண்பை என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் பராங்குசன் பெருவெற்றி பெற்றான்.
  • கீர்த்திவர்மனின் வலிமையைக்குறைக்கும் விதமாக இராஷ்டிரகூட தந்திதுர்கன் தனது பேரரசை வலிமைப்படுத்தினான். எல்லோராவைச் சுற்றித் தனது பேரரசை விரிவாக்கினான். சாளுக்கியப் பேரரசின் வடக்கு மாகாணங்களின் கட்டுப்பாட்டைக் குலைத்தான்.
    தந்திதுர்கனின் கூட்டணியில் பல்லவன் நந்திவர்மனும் இணைந்துகொண்டான்

  • கீர்த்திவர்மன் மீதான இறுதித் தாக்குதல் கி.பி. 752 இல் நடத்தினர். சாளுக்கியர் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டனர்.

மேலைச் சாளுக்கியர்:
  • கி.பி 10 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் தைலப்பா (கி.பி 973 - 997) என்பவனின் கீழ் சாளுக்கியர் மீண்டும் புகழ் பெறத் தொடங்கினர். இவர்கள் மேலைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர்.
  • மேலைச் சாளுக்கியர், இன்று பசவகல்யாண் என அழைக்கப்படும் கல்யாணி என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.
  • இவர்கள் கல்யாணி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததால் கல்யாணிச் சாளுக்கியர்கள்.
  • முற்காலத்தில் செல்வாக்குடன் இருந்த வாதாபி சாளுக்கியர்களுக்கு எதிராக எழுச்சிப் பெற்று அதிகாரத்தைக் இராஷ்டிரகூடர் கைப்பற்றி இருந்தனர். இவர்களுக்கு அடங்கி ஆட்சிசெய்து கொண்டிருந்த இரண்டாம் தைலப்பன் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டு தனது சுயாட்சியை அறிவித்து தனது பேரரசை நிறுவினான்
  • சோழர்கள் குடும்பத்துகள் வாரிசு தொடர்பான நெருக்கடியில் பலவீனம் அடைந்திருந்தனர். இந்நிலையில் உத்தம சோழனுக்கு எதிரான 980இல் நடந்த போரில் இரண்டாம்  தைலப்பன் வெற்றிபெற்றான்.
  • சுமார் 300 ஆண்டுகள் புகழுடன் விளங்கிய சாளுக்கியர், போசளர் மற்றும் யாதவர்களினால் ஒடுக்கப்பட்டனர். கி.பி 1184 தொடக்கம் 1200 வரை ஆண்ட நாலாம் சோமேஸ்வரனே குறிப்பிடத்தக்க சாளுக்கியர்களில் இறுதியானவன் ஆவான்.
  • சியூனா, போசளர்(இரண்டாம் வீர வல்லாளன்), காக்கத்தியர் ஆகிய மூன்று மரபினரும் காவிரி மற்றும் நர்மதை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரப்பில் விரிந்திருந்த மேலைச்சாளுக்கிய பேரரசின் நிலப்பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர்.
கீழைச் சாளுக்கியர்:
  • கீழைச் சாளுக்கியரின் தலை நகரம் வேங்கி
  • இரண்டாம் புலிகேசியின் சகோதரனான் விஷ்னுவர்தன் கீழைச் சாளுக்கிய மரபை  தோற்றுவித்தான்
  • கீழைச் சாளுக்கியர் சோழர்களுடன் நட்பாய் இருந்தனர்.
  • சாளுக்கிய மரபில் வந்த குலொத்துங்க சோழன் இந்த அரசை சோழ அரசுடன் இணைத்துக் கொண்டான்