இராஷ்டிரகூடர்கள்



  • எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும். அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார்.
  • தந்திதுர்கா சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார். அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர்
  • தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக கிபி753இல் உருவாகினர். பின்பு தந்திதுர்கா தன் மாமனாரான பல்லவ அரசன் நந்திவர்மனுக்கு சாளுக்கியர்களிடம் இருந்து காஞ்சியை மீட்க உதவினான்.
  • தலைநகரம்    :     மன்யக்கேடா
  • அரேபியர்கள் 851 காலத்தில் இராஷ்டிரகூடர்கள் உலகின் நான்கு முதன்மையான பேரரசுகளில ஒன்று என்று சில்சிலாடுட்டவரிக் (Silsilatuttavarikh) என்ற நூலில் குறித்துள்ளனர்
  • இம்மரபு அரசர்கள் தொடக்கத்தில் இந்து சமயத்தை பின்பற்றினார்கள். பின்னால் வந்த அரசர்கள் ஜைன மதத்தின் மீது பற்றுகொண்டிருந்தார்கள்.
  • இப்பேரரசின் புகழ்பெற்ற மன்னன் முதலாம் அமோகவர்சா இயற்றிய கவிராஜமார்கம் கன்னட இலக்கியத்தின் சிறப்பான படைப்பாகும்.
  • இவர்கள் ஆட்சியில் திராவிட கட்டகலை பாணியில் சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில், மகாராட்டிரத்திலுள்ள எலிபண்டா குகைகள், கருநாடகத்தின் பட்டடக்கலில் உள்ள காசிவிசுவநாதன் கோவில், ஜைன நாராயணன் கோவில் ஆகியவை இவர்களின் கட்டகலைக்கு காட்டாக உள்ளன. இவை அனைத்தும் உலகப் பாரம்பரியக் களத்தின் பாதுகாப்பில் உள்ள இடங்களாகும்.
  • இராஷ்டிரகூடர்கள் சுவர்ணா, திரம்மா எனப்படும் தங்க வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். இவை 65 தானியம் எடையுடையவை.  
  • களஞ்சு 48 தானியம் எடையுடையது,  
  • காசு 15 தானியம் எடையுடையது
  •  மஞ்சடி 2.5 தானியம் எடையுடையது,  
  • அக்கம் 1.25 தானியம் எடையுடையது
  • கோத்திக அமோகவர்சா காலத்தில் பரமார அரசன் சியகா அர்சா இப்பேரரசை தாக்கி மன்யக்கேடாவை சூறையாடினான் இந்நிகழ்வு இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. தற்கால பீசப்பூர் மாவட்டத்தின் பகுதியை ஆண்ட இவர்களின் சிற்றரசன் இரண்டாம் தைலப்பா தன்னை சுதந்திர அரசாக அறிவித்ததும் இப்பேரரசு முடிவுக்கு வந்தது.  இப்பேரரசின் கடைசி மன்னன் நான்காம் இந்திரன் சரவணபெலகுளாவில் ஜைன வழக்கப்படி உண்ணா நோம்பு இருந்து உயிரை விட முடிவு செய்தான். இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சியை அடுத்து அப்பேரரசின் பல சிற்றரசர்களும் சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர்.