சமண சமயம்



இந்தியாவில் தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆருகதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சமண சமயத்தில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும் , வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள் 


கொல்லாமை கொள்கை
 
திகம்பரர்-  எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான்.திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை,அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதோர் என பொருள்படும்.இவர்கள் மகாவீர்ரின் கொள்ககளை பின்பற்றுபவர்கள்
சுவேதாம்பரர் -என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர்.இவர்கள் 23 வது தீர்த்தங்காரார் பார்சவனாதரின் கொள்ககளை பின்பற்றுபவர்கள்


முதல் தீர்த்தங்கார் ஆதிநாதர் என்ற்ழைக்கப்பட்ட ரிஷபதேவர்
தமிழில் சமணம் நோக்கிய ஆக்கங்கள்:
சிலப்பதிகாரம் 
சீவக சிந்தாமணி
வளையாபதி
சூடாமணி
மகாவீரர்:
மகாவீரர் (599 – 527 BCE என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார்  சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார் மகாவீரர்.
 
இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார்.
தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து 42வதுவயதில் கைவல்யா என்னுமிடத்தில் ஞானம் பெற்றார்
 தமது 72ஆவது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் எய்தினார்.

சமண சமயத்தின் புனித தலங்கள் 5



முக்தி நிலையை கீற்கண்ட மூன்று ரத்தினங்கள் அல்லது மும்மணிகளை பின்பற்றுவதன் மூலம் அடையலாம்.
1.நன்னம்பிக்கை
2.நல்லறிவு
3.நன்னடத்தை
நன்னடத்தை 5 பிரிவுகளுடையது
வன்முறை தவிர்த்தல் (அகிம்சை) - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்;
வாய்மை (சத்தியம்) - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;
திருடாமை(அஸ்தேயம்) - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;
பாலுறவு துறவு (பிரமச்சரியம்) - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;
உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.


ராஜஸ்தான்- மவுண்ட் அபு - தில்வாரா கோயில்

கஜிராஹோ ,சித்தூர், ரனக்பூர்- சமணர் கோயில்