விஜயநகரப் பேரரசு



விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிறுவப்பட்டது. இவர்களின் தலைநகரம் ஹம்பி ஆகும். இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.

சங்கம மரபு
சாளுவ மரபு
துளுவ மரபு
அரவிடு மரபு

சங்கம மரபு
முதலாம் ஹரிஹரர் (கி.பி. 1336-1356) விஜயநகரப் பேரரசை நிறுவியவர் ஆவார். ஹக்கா, வீர ஹரிஹரர் போன்ற பெயர்களாலும் அறியப்படும் இவர் குறும்பர் (Kuruba) இனக்குழுவைச் சேந்தவரும், சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நாடகத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினார். இவர் 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (Gutti) என்னும் தனது தலைமையிடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சால அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர் 1343 இல் ஹொய்சால அரசன் மூன்றாவது வீர பல்லாலனின் மறைவைத் தொடர்ந்து ஹொய்சாலம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.


தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜய நகர மன்னர் முதலாம் புக்கர்.

பிரௌத ராயன் அல்லது பிரௌத தேவ ராயன் என்று அழைக்கப்பட்டவன் 1485 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிபீடம் ஏறியவன். ஆனால் மிகக் குறுகிய காலமே ஆட்சியில் இருக்க முடிந்தது. இரண்டாம் தேவ ராயனுக்குப் பின்னர், இவனுக்கு முன்னிருந்த இரண்டு அரசர்களும் பேரரசை நிவகிப்பதற்கான திறமையைப் பெற்றிருக்கவில்லை. இதனால் உள்நாட்டிலும், வெளியிலிருந்தும் பேரரசுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பேரரசு இவற்றைச் சமாளிக்கும் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் பேரரசன் இரண்டாம் விருபக்ஷ ராயனின் மறைவைத் தொடர்ந்து அரசனான பிரௌத ராயன் மக்களால் மதிக்கப்படாத ஒரு அரசனாக இருந்தான்.

சாளுவ மரபு
சந்திரகிரிப் பகுதியில் ஆளுநராக இருந்த சாளுவ நரசிம்ம ராயன், துளுவ நரச நாயக்கன் என்பவனை விஜயநகரத்துக்கு அனுப்பி பிரௌத ராயனைப் பதவியில் இருந்து அகற்றினான். அரியணை ஏறிய அதே ஆண்டிலேயே அரசிழந்த இவனே விஜயநகரப் பேரரசை நிறுவிய சங்கம மரபின் கடைசி அரசனாவான். இவனுடைய வீழ்ச்சியுடன் விஜய நகரப் பேரரசில் சாளுவ மரபின் ஆட்சி தொடங்கியது.

துளுவ நரச நாயக்கன் (கி.பி. 1491-1503) விஜயநகரப் பேரரசின் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் கீழ் திறமையான தளபதியாக இருந்தவன். துளுவ நரச நாயக்கன் தந்தையான சாளுவ குண்டப்பா நாயக்கர் , சந்திரகிரியின் சேனாதிபதி.

துளுவ மரபு
சாளுவ நரசிம்மனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மூத்தமகனான திம்ம பூபாலன் குறுகிய காலத்திலேயே தளபதி ஒருவனால் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து சாளூவ நரசிம்மனின் இரண்டாவது மகனை இரண்டாம் நரசிம்மராயனாக துளுவ நரச நாயக்கன் அரியணை ஏற்றினான். இவன் வயதில் குறைந்த சிறுவனாக இருந்ததால், நரச நாயக்கன் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்திவந்தான்.

கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவன் ஆவான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவன், கன்னட மற்றும் தெலுங்கு மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில் ஒருவனுமாவான். இவன், ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன் என்றும் அழைக்கப்பட்டவன்.

இவர் எழுதிய நூல் அமுக்தமல்யா (ஆண்டாள் சரித்தரம்)

கிருஷ்ண்தேவராயனின் அமைச்சரவை அஷ்டதிக்கஜங்கள்


டொமிங்கோ பயஸ் (Domingo Paes) என்பார் 1520 ஆம் ஆண்டில் விசயநகரப் பேரரசுக்கு வந்த ஒரு போத்துக்கீசப் பயணி ஆவார். விசயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பி பற்றி அவர் கொடுத்துள்ள விபரங்கள் இப் பழங்கால நகர் குறித்த பிற வரலாற்றுக் குறிப்புக்கள் எல்லாவற்றையும் விட கூடுதல் விபரங்களைத் தருபவை. இவர் பேரரசர் கிருட்டிண தேவ ராயர் ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசுக்கு வந்தார்
பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz) ஒரு போத்துக்கீசப் பயணியும், வரலாற்று எழுத்தாளரும், குதிரை வணிகரும் ஆவார். 1535 - 1537 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அக்காலத்தில் விசயநகரப் பேரரசின் தலைநகராக இருந்த விசயநகரத்தில் தங்கி இருந்தார். இவருடைய எழுத்துக்கள் அக்காலத்தின் விசயநகரம் பற்றிய பல சுவையான விபரங்களைத் தருகின்றன பாரிய அரண்கள், காவல் கோபுரங்கள், பாதுகாப்புச் சுவர்கள் போன்றவற்றின் கட்டுமான வேலைகள் குறித்த தகவல்களும் இவற்றுள் அடங்குகின்றன. இவற்றில் இருந்து இத் தலைநகரத்தின் எல்லைகள் இரண்டாம் புக்காராயர், முதலாம் தேவராயர் ஆகியோர் காலத்தில் விரிவாக்கப்பட்டது தெரியவருகிறது.

அரவிடு மரபு
அலிய ராம ராயன் (கி.பி. 1542-1565) எனப் பரவலாக அறியப்படுகின்ற ராம ராயன் விஜயநகரப் பேரரசின் அரவிடு மரபைத் தோற்றுவித்தவன் ஆவான்.
சதாசிவ ராயன் விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்ததுளுவ மரபை சேர்ந்த ஒரு அரசனாவான். இவன், அரசனாக இருந்த அச்சுத தேவ ராயன் 1543 ஆம் ஆண்டில் இறந்ததைத் தொடர்ந்து முடிசூட்டப்பட்டான். கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே சிறுவனாக இருந்த சதாசிவ ராயன் அரசனாக முடிந்தது. எனினும், ராம ராயன் தானே பதில் ஆளுனர் (Regent) ஆகி அரச நிர்வாகத்தை நடத்தி வந்தான். சதாசிவராயன் நாட்டை ஆள தகுதி படைத்த பின்னரும், அவனை ஆட்சி செய்ய விடாமல் ஒரு சிறைக் கைதி போலவே ராம ராயன் நடத்தினான். சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.


மூன்றாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1642-1652) விஜயநகரப் பேரரசின் கடைசி அரசனாவார்

தக்காணத்து சுல்தான்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். 1565 இல் விஜயநகரப் பேரரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து தலைக்கோட்டை சமரில் தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர்