போசளப் பேரரசு (Hoysala Empire, ஹோய்சாளப் பேரரசு) பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும்.
இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின் ஹளபீடினைத்(அல்லது துவாரகாசமுத்திரம்) தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.
இம்மரபின் மூன்றாம் பல்லாளாவை மாலிக்கபூர் தோற்கடித்தார்
இம்மரபின் கடைசி மன்னர் நான்காம் பல்லாளா பாரவி கிர்தார்ஜூனியம் என்னும் நூலை படைத்தார்
ஹோய்சாள மரபை தொடங்கியவர் வினையாதித்யா ஆவார்.
இவரின் தலைநகரம் சோசவீர் அ பேளூர்
ஹெய்சாள மரபின் விஷ்ணுவர்த்தனர் தலைநகரை துவாரசமுத்திரத்திற்கு மாற்றினார்
ஹெய்சாள மரபின் இரண்டாம் நரசிம்மன் மாறவர்ம சுந்தரபாண்டியனை தோற்கடித்தார்இம்மரபின் மூன்றாம் பல்லாளாவை மாலிக்கபூர் தோற்கடித்தார்
இம்மரபின் கடைசி மன்னர் நான்காம் பல்லாளா பாரவி கிர்தார்ஜூனியம் என்னும் நூலை படைத்தார்
முதன்மையாகக் கோவில்களின் கட்டிடக்கலைக்காக ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை பேளூரி்ல் உள்ள சென்னகேசவ கோவில், ஹளபீடில் உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன.
கி.பி.1318இல் தேவகிரி தில்லி சுல்தானால் ஆக்கிரமிக்கப்பட்டதன் மூலம், யாதவ ராஜ்யம் முற்றிலும் அழிந்து விட்டது. அங்குத் தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சி நடந்து வந்தது. மூன்றாம் வீர வல்லாளன் தில்லிக்குத் திரை செலுத்த மறுத்துத் தனது முந்தைய ஒப்பந்தத்திலிருந்து விலகினான். இதனால் துக்ளக் கி.பி.1327 தெற்கில் மீண்டும் ஒரு படையை அனுப்பினான் அலேபீடுவை இரண்டாவது முறையாகத் தில்லி படைகள் கொள்ளையிட்டன. இதனால் மூன்றாம் வீர வல்லாளன் பின்வாங்கிச் சென்று திருவண்ணாமலையிலிருந்து தனது எதிர்ப்பைத் தொடர்ந்தான். கி.பி.1336 வாக்கில் தென்னிந்தியாவின் போசாளர்களைத்தவிர அனைத்து இந்து அரசுகளும் தில்லியால் தோற்கடிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகள் தில்லி சுல்தானகத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. மதுரையும் சுல்தான் ஆட்சியில் கி.பி.1335-6 காலகட்டத்தில் இருந்தது. முஸ்லீம் படையெடுப்பை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், மூன்றாம் வீர வல்லாளன் துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஹொசபட்டணா எனும் இரண்டாவது தலைநகரை நிறுவினான். இதுவே பின்னர் வந்த விஜயநகரம் என்ற பெயருடன் விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது. கி.பி.1342-3 இல், போசாளர்களின் வருங்காலத்தை முடிவுசெய்யும் வகையில் கடுமையான போர் மூன்றாம் வீர வல்லாளனுக்கும் மதுரை சுல்தானகத்தின் சுல்தான் கியாஸ்-உத்-தின் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. போசாளர்கள் வெற்றிபெறும் நிலையில் இருந்தபோது , போசாள மன்னன் மதுரை சுல்தான்களால் பிடிபட்டு கொல்லப்பட்டதால், போரின் முடிவு துக்ககரமாக மாறியது. அவரது மகன், நான்காம் வீர வல்லாளனுடன் போசாளர்களின் ஆட்சி கி.பி.1346யுடன் முடிவுக்கு வந்தது.