தில்லி சுல்தானகம்


 தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம் (1206-90), கில்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சய்யித் வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். 1526 இல் முகலாயப் பேரரசு சுல்தானகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டது.

மம்லுக் வம்சம் அல்லது குலாம் வம்சம்
இந்தியாவின் இரண்டாவது முசுலிம் ஆக்கிரமிப்பாளர் முகம்மது கோரி அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தார். இவர் பிரித்திவிராஜ் சௌகானுடன் தாரைன் போர்கள் எனப்பட்ட இரண்டு போர்களில் ஈடுபட்டார். இரண்டாவது போரில் வெற்றிபெற்ற "முகம்மது கோரி" அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினார். இந்த வம்சத்தின் பெரும்பாலான ஆட்சியாளர் தொடக்கத்தில் கோரியின் அடிமைகளாகவே இருந்ததால் இவ்வம்சம் அடிமை வம்சம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. "கோரி" குதுப்புத்தீன் ஐபாக் என்பவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுனராக்கியதுடன் குதுப் மினாரையும் கட்டத் தொடங்கினார். எனினும் இது குதுப்புதீனுக்குப் பின் வந்த இல்துமிசு என்பவராலேயே கட்டி முடிக்கப்பட்டது. இல்துமிசுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் பல்பான் என்பவர். இவருக்குப் பின்னர் இல்துமிசின் மகளான ராசியா சுல்தானா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் இவர் முசுலிம் உலகின் முதலாவது பெண் ஆட்சியாளராகவும் விளங்கினார்.
இந்த வம்சத்தின் கடைசி சுல்தான் முயிசுத்தீன் கைக்காபாத்

இல்த்துத்மிசின் மூத்த மகனான நசிருத்தீன் மகுமூத்துக்காகக் கிபி 1231 ஆம் ஆண்டில் கட்டப்பட இந்தியாவின் முதலாவது இசுலாமியச் சமாதிக் கட்டிடம் புகழ்பெற்றது

·          குத்புதீன் ஐபக் “லாக்பக்ஷா”என அழைக்கப்பட்டார்
·          குதுப் – உத்- தீன்- பக்தியார் என்ற சூஃபு துறவியின் நினைவாக குதுப்மினாரை கட்ட தொடங்கினார்
·          நாட்டை இக்தாதர்கள் எனப்படும் மாநிலங்களாக பிரித்து ஆண்டனர்
·          குத்புதீன் ஐபக்கின் மருமகனான இல்துமிஷ் குத்புதீன் ஐபக்கின் மகன் ஆராம்ஷாவ கொன்று அரசனானார்
·          இல்துமிஷ் டங்கா என்ற வெள்ளி நாணயத்தையும், ஜிடால் என்ற செம்பு நாணயத்தையும் வெளியிட்டார். இல்துமிஷ் குதுப்மினாரை கட்டி முடித்தார்


கால்சி அல்லது கில்சி வம்சம்:
கால்சி அல்லது கில்சி வம்சம் என அழைக்கப்படும் வம்சம் முகம்மது கோரியின் காலத்தில் தம்மை வங்காளத்தின் ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவர்கள் சதிப் புரட்சி மூலம் மம்லுக் ஆட்சியாளரை வெளியேற்றிப் பேரரசைக் கைப்பற்றினர்.
இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார்.
அலாவுதீன் கில்ஜி தன்னை “கடவுளின் பிரதிநிதி”யாக கருதினார்

துக்ளக் வம்சம்:
கியாசுதீன் துக்ளக் எனப்படும் காஸிமாலிக் துக்ளக் மரபினை தோற்றுவித்தார்
இவரது மகன் ஜுனாகான் “முகமது பின் துக்ளக்” என்னும் பெயரில் அரசனானார்
தக்காவி என்னும் விவசாய கடன்களை அளித்தார்
முகமது பின் துக்ளக்கிற்கு பின் வந்த பிரோஸ் துக்ள்க் நான்கு வரிகளை விதித்தார்
கரோஜ் – விளைச்சளின் 1/10 பங்கு
கம்ஸ் – போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/5 பங்கு
ஜெஸியா – தலைவரி
ஜகாத் – இஸ்லாமிய மதசடங்குகள் செய்ய கட்டணம்

சையது மரபை கிஸில்கான் தோற்றுவித்தார்

லோடி வம்சம்:
லோடி மரபை பாஹ்லால் லோடி தோற்றுவித்தார்
சுல்தானகத்தை ஆண்ட கடைசி வம்சம் லோடி வம்சம் ஆகும்.
இந்த வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் இப்ராகிம் லோடி
ஏப்ரல் 1526 இல் இடம்பெற்ற முதலாவது பானிப்பட் போரில் பாபர் வெற்றிபெற்றார். இப்ராகிம் லோடி போர்க்களத்தில் கொல்லப்பட்டார். பாபர் ஆக்ராவையும், தில்லியையும் கைப்பற்றிக் கொண்டார். இதன் மூலம் பின்னர் 300 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி நடத்திய முகலாய வம்சத்தையும் தொடக்கி வைத்தார்.