இயற்பெயர் : ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி
காலம் : நவம்பர் 11, 1888 - மார்ச் 19, 1982
மனைவி : சுசேதா கிருபளானி
பணி : வழக்கறிஞர்
- சிந்து மாகாணத்தின்(பாகிஸ்தான்) ஹைதராபாத்தில் பிறந்தவர். அதே ஊரில் மெட்ரிகுலேஷன் வரை படித்தார். பிறகு மும்பை வில்சன் கல்லூரியில் சேர்ந்தார்.
- முஸாஃபர்பூர் கல்லூரி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும், மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராகவும் பணியாற்றினார்.
- 1934 முதல் 1945 வரை இந்திய தேசிய காங்கிரன் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர்.
- பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார்.
- இவருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் விலகினார்.
- "க்ருஷக் மஸ்தூர் பிரஜா பார்ட்டி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.பிறகு இந்தக் கட்சி பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியுடன் இணைக்கப்பட்டது
- பழுத்த அனுபவசாலியான கிருபளானி, நாடாளு மன்றத்தில் எந்தக் கட்சியையும் சாராமலேயே மதிப்பு வாய்ந்த எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
- மௌலானா அபுல்கலாம் பிறந்த அதே தேதியில் அதே தினத்தில் பிறந்தார்