அருணா ஆசஃப் அலி

இயற்பெயர் : அருணா கங்குலி
காலம்   : சூலை 16, 1909 - சூலை 29, 1996
  • அருணா பிரித்தானிய பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார்
  • கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
  • காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசஃப் அலியை அலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார்.
  • 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை ஏற்றியதற்காக பரவலாக அறியப்பட்டவர்.
  • 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார்
  • அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன
  • மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.