வேதங்கள்


இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும்
  1. ரிக் வேதம்
  2. யசுர் வேதம்
  3. சாம வேதம்
  4. அதர்வண வேதம்
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.

சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
பிரமாணம் - எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
ஆரண்யகம் - எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
உபநிடதங்கள் - (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.

விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.

ரிக் வேதம்:
  • இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது
  • இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும்
  • ரிக் வேதம் என்றாலே செய்யுள் என்றுதான் பொருள்
  • பிரார்த்தனைப் பாடல்களின் தொகுதியே ரிக் வேதம் என்று சொல்லலாம்
  • ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.
  • ரிக் வேதத்தில் 10 பாகங்கள் மற்றும் 1028 சுலோகங்கள் உள்ளன
  • பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும்புரோடாஷ்என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பம்,ரிக் வேதத்தில் அரிசி பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை
  • சவ்வரிசி முதன்மையான உணவாக இருந்தாலும், வறுத்த தாணியத்தைதானாஎன்றும், தினை மாவை 'கரம்பஎன்றும், ரொட்டியைஅபூப்என்றும், அழைத்து அதை உண்டனர்
  • ராஜனுக்கு அறிவுரை கூற, ‘சபாஎன்ற மூத்தோர் சபையும், ‘சமிதிஎன்ற பொது சபையும் இருந்தன.
  • ரிக் வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் ஐதரேய உபநிடதம் ஆகும். இது 'ஐதரேயர்' என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர்.
  •  ஆரியர்களின் சமூக அமைப்பு :குடும்பம்-> கிராமம்-> விஸ்-> ஜனா-> ஜனபதா
  • ரிக் வேதத்தில் பல கிராமங்கள் விஸ் என அழைக்கப்பட்டன.
    இதன் தலைவர் விசுவபதி
  • பெரிய அமைப்பு ஜனா இதன் தலைவர் ராஜன் பிரஜாபதி
  • சமூகத் தலைவர்களைகுல்ப்’ (குலத்தலைவர்) என்றும் 'விரஜாபதி’ (சமூகத்தலைவர்), ’கணபதிஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர்
  • ரிக் வேதத்தில் முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது பாகத்தை கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். மூன்றாவது பாகத்தை விஸ்வாமித்திரரும், நான்காவது பாகத்தை வாமதேவரும் ஐந்தாவது பாகத்தை அந்திரியும், ஆறாவது பாகத்தை பரத்வாஜரும், ஏழாவது பாகத்தை வஸிஷ்டரும், எட்டாவது பாகத்தை ஆங்கிரகரும், ஒன்பதாவது பாகத்தை கன்வரும் கண்டறிந்து வெளிபடுத்தியதாக கருதப்படுகிறது.
  • வர்கள் அருந்தும் சிறப்பான பானம், சோம பானம் ஆகும்.(இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலத்தின் அனைத்து 114 சூக்தங்களும் சோமபானத்தை பற்றியது தான்) ஆனால் அவர்கள் சரா பானம் அருந்துவது இல்லை
  • நிஷ்கா ன்ற தங்க அலகுகள் வாணிபம் செய்ய பயன்பட்டது
  • கார்கி, மைத்ரேயி – கல்வியில் சிறந்த பெண்கள் 
  • "காயத்திரி மந்திரம்" எனப்படுவதுசாவித்திரி மந்திரம்என்றும் கூறப்படுகிறது.விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ளது.
யசுர் வேதம்:
  • யசுர் வேதம் (சமற்கிருதம் yajurveda, yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது.
  • யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன
  • யாகங்களுக்கான சடங்குகள் மற்றும் வழி முறைகளைப் பற்றியது யசுர் வேதம்.
சாம வேதம்:
  • சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.
  • சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும்.
  • ரிக் வேதத்திலிருந்து பல பிரார்த்தனை பாடல்களை பண் அமைத்து இனிமையாக்கித் தருகிறது சாம வேதம். குறிப்பிட்ட சில யாகங்களில் எப்படி எப்படி அவற்றை ஓத வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது . நம் முடைய மரபு வழி இசைக்குப் பிறப்பிடமே சாம வேதம் தான்
அதர்வண வேதம்:
  • அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
  • ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் பெறுவது தொடர்பான அறிவியல் துறையான ஆயுர் வேததத்தையும் , பெரும்பாலும் அற நெறிகளையும் உள்ளடக்கிய தொகுப்பு அதர்வண வேதம்.
  • அதர்வண வேதம் பில்லி, சூனியம் பற்றிக் குறிப்பிடுகிறது
உபவேதங்கள்:
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன.

தனுர் வேதம்போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல், இது ரிக் வேதத்தைச் சார்ந்தது.இவ்வேதத்தை விஸ்வாமித்ரர் வெளியிட்டார்
காந்தர்வ வேதம்நுண்கலைகள் குறித்த அறிவியல். இது சாம வேதத்தைச் சார்ந்தது.இவ்வேதம் பரதரால் இயற்றப்பட்டது
ஆயுர்வேதம்வாழ்க்கை குறித்த அறிவியல். இது யசுர் வேதத்தை சார்ந்தது.ஆயுர் வேதம் பிரம்மா தன்வந்தரி ஆகியோரால் வெளியிடப்பட்டதாகும்
அர்த்த சாஸ்திரம்- இவற்றில் பல உண்டு அதில் முக்கியமானவை ராஜ்ய விஷயமாக சுக்ர நீதி, காமந்தக நீதி, கெளடில்ய நீதி என்பதாகும். மிருகங்களை எப்படி அடக்குவது அவைகளின் பலன்களை எப்படி அடைவது போன்ற சாஸ்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செடி கொடி மரம் இவைகள் இவ்வொன்றின் பயன் குணம் முதலியவையாகும். நட்சத்திரம் பஞ்சபூதம் முதலிய விவரம் பறவைகள் அவைகளின் சகுனம் 64 கலைகள், 18 வித்தைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

சில்ப வேதம்- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

புராணங்கள் :

புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும்புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

உபநிடதங்கள்:

உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.

உபநிடதங்கள் 108 வகைப்படும்
இவைகளில்,
10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை
32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
16 சாம வேதத்தைச் சார்ந்தவை
31 அதர்வண வேதத்தைச் சார்ந்தவை.

'சத்ய மேவ ஜெயதே' என்னும் வரி முண்டக உபநிடததில் இருந்து எடுக்கப்ப்ட்டது