மகாபாரதம்



  • வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது
  • இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
  • இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன.
  • இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். 
  • பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார்.
  •  வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.

மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:

ஆதி பருவம்: 
19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.
சபா பருவம்: 
20 - 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
ஆரண்யக பருவம்: 29 - 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
விராட பருவம்: 45 - 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
உத்யோக பருவம்: 49 - 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
பீஷ்ம பருவம்: இது 60 - 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.-முதல் பத்து போர் நாள்
துரோண பருவம்: 65 - 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர். 10-15 போர் நாள்
கர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.16-17 போர் நாள்
சல்லிய பருவம்: 74 - 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான். 18ம் போர் நாள்
சௌப்திக பருவம்: 78 - 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
ஸ்திரீ பருவம்: 81 - 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
சாந்தி பருவம்: 86 - 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
அனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
ஆசிரமவாசிக பருவம்: 93 - 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
மௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
மகாபிரஸ்தானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
சுவர்க்காரோகண பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.

99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.

மகாபாரதத்தின் ஊர்கள்:
அத்தினாபுரம் : தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.
அஸ்தினாபுரத்தினை ஆண்ட பரத குல மன்னர்களின் பட்டியல் பின்வருமாறு:

யயாதி
துஷ்யந்தன்
பரதன்
குரு
சாந்தனு
சித்ராங்கதன்-சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்தவர்
விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
பாண்டு - அம்பலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி}
துரியோதனன் -திருதராட்டிரன் மகன்
தருமர் - குந்தியின் மகன்
பரீட்சித்து - அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறந்த மகன்
ஜனமேஜயன் - பரீட்சித்தின் மகன்

காந்தாரம்: இந்நாடு தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு முக்கிய நகராக உள்ளது
இந்திரப்பிரஸ்தம் : இந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது
குருச்சேத்திரம் என்ற இடத்தில் குருச்சேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது
மகத நாடு முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது

கதை மாந்தர்கள்:





சஞ்சயன்:
சஞ்சயன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தின்கதை மாந்தர்களுள் ஒருவன். மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.

சுபலன்:
சுபலன் காந்தார நாட்டின் மன்னன். இவரின் மகன் சகுனி. சிவபக்தையான காந்தாரி இவரது மகள்.
சகுனி காந்தாரியின் தம்பி ஆவார்
சகுனியின் மகன் உல்லூகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டான்.

சல்லியன்:
சல்லியன் மத்ரா நாட்டின் அரசனாவான். மேலும் கர்ணனின் தேரோட்டி
அபிமன்யுவின் மைத்துனனும் விராட நாட்டு இளவரசனுமான உத்தரனுடன் போர் புரிந்து தனது ஈட்டியால் கொல்கிறான்
பதினெட்டாம் நாள் தருமனின் ஈட்டிக்கு இரையாகிறான்

விராடன்:
விராடன் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன் ஒரு அரசனாவான். துரியோதனன் ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர். இவன் சுதேஷ்னா என்பவளை மணந்து கொண்டான். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும் இவனது மக்களாவர். பாரதப் போரின்போது இவன், துரோணரால் கொல்லப்பட்டான்.

ஜெயத்திரதன்:
ஜெயத்திரதன் சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ’இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ’என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான்
அபிமன்யுவை கொன்றதற்காக அர்ஜுனனால் கொல்லப்பட்டான்

கடோற்கஜன்:
இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.
கடோற்கஜனின் மகன் பர்பரிகன். பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும் தோற்கும் கட்சிக்கே ஆதரவு என்ற தனது கொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.

சாத்தியகி:
சாத்தியகி அல்லது சாத்தகி அல்லது  யுயுதனன் என்றும் அழைக்கப்படும் இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான்.
கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.

கிருதவர்மன்
கிருதவர்மன் குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.போரின் முடிவில் நாடு திரும்பி ஆண்டுவந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்.

பகதத்தன்:
அவனது யானை சுப்ரதீபம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் கண்ணன் தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் அர்ச்சுனனும் தங்கள் திறமைகள் அத்தனையும் பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது

கிருபர்:
கிருபர் அல்லது கிருபாச்சாரியார் அஸ்தினாபுரம் அரசவையில் ராசகுருவாக இருந்தவர். இவரது இரட்டையரான உடன்பிறப்பு கிருபி அந்நாட்டு தளபதி துரோணரின் மனைவியாவார்.சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்தவர்கள்

பரசுராமர்:
சத்திரியர்கள் மீது கோபம் கொண்டு சத்திரிய குல மக்களை குறிப்பாக கார்த்தவீரிய அருச்சுனனை அழித்தவர். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.

குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்:
கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.