பாமினி சுல்தானகம்
- பாமினி சுல்தானகம் (Bahmani Sultanate) என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இசுலாமியச் சுல்தானகம் ஆகும்.
- மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமையப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே சன்னி இசுலாம் பேரரசு ஆகும்.
- டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார்.
- 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள்.
- 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.
-
அகமது ஷா தலைநகரை குல்பர்காவில் இருந்து பிடாருக்கு மாற்றினார். கேசு தராஸ் என்ற துறவியுடன் கொண்ட பழக்கத்தின் காரணமாக இவரை வாளி அல்லது துறவி என்று அழைப்பர்)
- அவர்களின் பெயர்களுக்கு பின்வரும் சா(shah=ஷா) என்பது மரபுப் பெயராகும்.
- இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது.
- இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அஹமதுநகர், பேரர், பீதர்,பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய இந்த ஐந்து பேரரசுகளே பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன