சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி


காலம்: 10 டிசம்பர் 1878 - 25 டிசம்பர் 1972
  • சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்
  • தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்
  • 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராக பணியாற்றினார். 
  • 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பணியாற்றினார். 
  • 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார்.
  • பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார்.
  • சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
  • முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது
  • ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். எனவே ராஜாஜியின் மகள் மகாத்மா காந்தியின் மருமகள்
  • 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
  • புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே
  • இராமாயண மகாபாரத இதிகாசங்களைச் சாதாரண மக்களும் படித்துப் பயன்பெறும் வண்ணம்சக்கரவர்த்தித் திருமகன்என்று ராமாயணத்தையும்வியாசர் விருந்துஎன்ற பெயரில் மகாபாரதத்தையும் மொழி பெயர்த்தார்.
  • தஞ்சையில் நிலவிய நிலவுடைமையாளர் விவசாயிகளுக்கிடைய பகை முற்றி போராட்டம் நடந்த நிலையில்பண்ணையாள் சட்டம்கொண்டு வந்து உழைக்கும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார்.

படைப்புகள்:
தமிழில் முடியுமா
திண்ணை ரசாயனம்
சக்கரவர்த்தித் திருமகன்
வியாசர் விருந்து
கண்ணன் காட்டிய வழி
பஜகோவிந்தம்
கைவிளக்கு
உபநிஷதப் பலகணி
ரகுபதி ராகவ
முதல் மூவர் (மீ..சோமுவுடன்)
திருமூலர் தவமொழி (மீ..சோமுவுடன்)
மெய்ப்பொருள்
பக்திநெறி
ஆத்ம சிந்தனை
ஸோக்ரதர்
திண்ணை இரசாயனம்
பிள்ளையார் காப்பாற்றினார்
ஆற்றின் மோகம்
வள்ளுவர் வாசகம்
ராமகிருஷ்ண உபநிஷதம்
வேதாந்த தீபம்