லால் பகதூர் சாஸ்திரி



காலம்: அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966
இயற்பெயர் : லால் பகதூர் சிறிவஸ்தவா

  • இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார்.
  • உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந் பல்ல பண்ட் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்து துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார்.
  • 1957 ஆண்டு நடந்த பொது தேர்தலை தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராக பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்
  • லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்
  • பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான்(வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி) என்ற முழக்கத்தை உருவாக்கினார்
  • போர் நிறுத்த சாற்றுதலுக்கு பின் அதனை அமல் படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
  • இவரே பதவியில் உள்ள போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார்.