காலம் :
31 டிசம்பர்1738 – 5 அக்டோபர் 1805
பதவியில்
: 12 செப்டம்பர் 1786 – 28 அக்டோபர் 1793
காரன் வாலிஸ்
பிரபு ஒரு திட்டத்தை 1793-ல் கொண்டுவந்தார். பெர்மனெண்ட் செட்டில்மெண்ட்(நிலச்சீர்திருத்தம்
- ஜமீன் தாரி) என்ற அந்த திட்டத்தின்படி முன்பு வரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள்
அந்த நிலங்களின் உரிமையாளர்களாக ஜமீந்தார்களாக ஆக்கப்பட்டனர். கம்பெனிக்குத் தரவேண்டிய
வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஜமீந்தார்களால் அந்த வரியைச் செலுத்த முடியாமல் போனால்,
நில உரிமை அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு வேறொருவருக்குத் தரப்படும். இந்த சட்டத்தின்
மூலம் பிரிட்டிஷ் அரசு இதியாவில் அதற்கு முன்புவரை இருந்திராத ஒரு புதிய பெரு நிலக்கிழார்
பிரிவை உருவாக்கியது. இப்படியான வழிமுறை மூலம் கம்பெனிக்கு ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும்
வரியை தனித்தனியாக வசூலிக்க வேண்டிய சுமை இல்லாமல் போனது. சொற்ப அளவிலான ஜமீந்தார்களிடமிருந்து
நேரடியாக வரியை வசூலிப்பது எளிதாக இருந்தது.
மூன்றாம்
மைசூர் போரில் திப்பு சுல்தானை வெற்றி பெற்றான்.அவரது மகன்களை பிடித்து வைத்து கொண்டான்.
(ஸ்ரீரங்கபட்டினம் ஒப்பந்தம்)