அபுல் கலாம் ஆசாத்



முழுப் பெயர்  :  மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது
காலம்  :  11 நவம்பர் 1888 22, பெப்ரவரி 1958

  • ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்
  • சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்
  • கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.
  • அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் ஃபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.
  • 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.
  • இந்தியா விடுதலையடைந்த பிறகு இந்திய அரசின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்
  • உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார்.
  • 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது
  • மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேச கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.