முகமது இக்பால்

முழுப் பெயர்  :  சர் அலாமா முகமது இக்பால்
காலம்  :  நவம்பர் 9, 1877 – ஏப்ரல் 21, 1938
  • பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார்.
  • உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
  • பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.
  • இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது.
  • பின்னாளில் பாகிஸ்தானின் "தேசிய கவிஞர்" என அறிவிக்கப்பட்டார்
  • இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இவருக்கு “சர்” பட்டத்தை வழங்கினார்