காலம் : திசம்பர் 25, 1861 அலகாபாத்- நவம்பர் 12, 1946 (அகவை 84) பெனாரசு
- அவரது முதிய அகவையில் பலரும் அவரை 'மகாமனா' என்றழைக்கலாயினர்
- இவரது மூதாதையர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாதலால் மாள்வியாக்கள் என்று அழைக்கப்பட்டனர்
- இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மாளவியா நான்கு முறை பொறுப்பாற்றி உள்ளார்.
- ஆசியாவிலேயே மிகப்பெரும் தங்கியிருந்து படிக்கும் பல்கலைக்கழகமாக விளங்கும் வாரணாசியில் அமைந்துள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை (BHU) 1916இல் நிறுவியதற்காகப் பெரிதும் அறியப்படுகிறார்
- இந்தியாவில் சாரணர் இயக்கத்தை நிறுவியவர்களில் பண்டிதர் மாளவியாவும் ஒருவர்.
- இந்தியாவில் சாரணர் இயக்கம் முறையாக 1909ஆம் ஆண்டு பெங்களூருவின் பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் பிரித்தானிய அரசு துவங்கினாலும் உள்நாட்டு இந்தியர்களுக்காக நீதியரசர் விவியன் போசு, மதன்மோகன் மாளவியா, இருதயநாத் குன்சுரு, கிரிஜா சங்கர் பாஜ்பாய், அன்னி பெசண்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் 1913ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.
- மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த ஆங்கில நாளிதழ் த லீடரை 1909இல் அலகாபாத்திலிருந்து வெளியிட்டார்.
- மேலும், மாளவியா ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பதவி வகித்தார். இவரது முயற்சியால் இந்த நாளிதழின் இந்திப் பதிப்பு 1936ஆம் ஆண்டு முதல் வெளியானது.
- இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது மதன் மோகன் மாளவியா இறந்து 68 ஆண்டுகள் கழிந்து அவருக்கு வழங்கப்பட்டது. இது குறித்து 2014 திசம்பர் 24 ஆம் தேதி அன்று இந்திய அரசு அறிவித்தது