பல்லவர்



சிம்மவிஷ்ணு  
சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான்.


மகேந்திரவர்மன்
இவனது ஆட்சிக்காலத்தில்தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது.
புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே
மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான், இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்
சங்கீரண்ஜாதி என புகழப்பட்டார்
நரசிம்மவர்மன்
இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது

மகேந்த்ரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்ய அரசனான புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து ,காஞ்சி நகரை முற்றுகையிட்டான்.இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது.இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான்.இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன.இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை போக்கினர்.இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.
நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர்,திருஞானசம்பந்தர்,சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன

இரண்டாம் நரசிம்மவர்மன்
இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன்.
மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் இராசசிம்மனால் கட்டுவிக்கப்பட்டவையே
எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலும் இவன் திருப்பணியே ஆகும்.


இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
சாளுக்கிய இளவரசனாக இரண்டாம் விக்ரமாதித்தன் இருந்த காலத்தில் விக்ரமாதித்தனின் நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பரதேமேசுவரன் வேறு வழியின்றி சமாதானம் செய்துகொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்றான். பரமேசுவரன் போரில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணி, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் சிறீபுருசனால் இவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இவனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான்.
பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவர்கள் வாரிசு இல்லாமல் போயினர்.


இரண்டாம் நந்திவர்மன்
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் சந்ததியில்லாமல் இறந்துவிட, எதிரிகளின் கைகளின் பல்லவதேசம் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம்(தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம்) சென்றனர். அங்கே ஆட்சி செய்து வந்த சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் வழிவந்த கடவேச ஹரி வர்மாவின் நான்கு இளவரசர்களில் பல்லவதேசம் வந்து ஆட்சிசெய்ய சம்மதம் தெரிவித்த பல்லவ மல்லன் நந்திவர்மனை அழைத்து வந்து பதவியேற்கச் செய்தனர்.
பல்லவமல்லன் எனவும் அழைக்கப்பட்டான்
 பட்டத்திற்கு வரும் பொழுது நந்திவர்மனுக்கு 12 வயது தான். இதைப் பற்றிக் குறிப்பிடும் பண்டைய இலக்கியங்கள் சிறுவயதில் பட்டத்திற்கு வந்த மன்னன் என்று இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி தெரிவிக்கின்றன.

தந்திவர்மன்
இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். தந்திவர்மனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும் வைரமேகன் என்னும் வேறு பெயரும் உண்டு


மூன்றாம் நந்திவர்மன்
இவன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் பேரனும் தந்திவர்மனின் மகனுமாவான்.
இவனுக்கு இரு மனைவியர்கள் மற்றும் இரு மகன்கள். பல்லவப் பேரரசை இரு பகுதிகளாகப் பிரித்து தென் பகுதியை நிருபதுங்கவர்மனுக்கும், வட பகுதியை கம்பவர்மனுக்கும்  கொடுத்தான்

நிருபதுங்கவர்மன்
நிருபதுங்கவர்மன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் மன்னனாவான். இவன், மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மூத்த மகன். மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு நிருபதுங்கவர்மன் மன்னராக முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் கம்பவர்மனின் புதல்வன் அபராசித வர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணியதால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. நிருபதுங்கவர்மன், இரண்டாம் வரகுண பாண்டியனிடம் உதவிப் பெற்றுக்கொண்டான். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத் உதவி புரிந்தனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றான். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றும் வெற்றி கிட்டவில்லை. சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்


அபராசித வர்மன்
 திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் I இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது.