சோழர்



சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார்

சோழர்களின் கொடி புலிக்கொடி

சோழர் சூடும் மலர் ஆத்தி.

தலைநகரம்        
முற்காலச் சோழர்கள்: பூம்புகார், உறையூர்,
இடைக்காலச் சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம்

முற்காலச் சோழர்கள்

செம்பியன் - இந்திர விழாவை இவனே ஆரம்பித்தான். புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவன் என்று கூறப்பெறுகிறான்.
எல்லாளன் - கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது இவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது
இளஞ்சேட்சென்னி -
கரிகால் சோழன் -கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.(எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.   வெண்ணிப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான்
பிள்ளைகள்: நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி
மாவளத்தான் சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி. அண்ணனுக்கு உதவியாக இவன் ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள் இருந்தவன் நெடுங்கிள்ளி என்னும் சோழ அரசன்

நெடுங்கிள்ளி -

நலங்கிள்ளி -

கிள்ளிவளவன் -

கோப்பெருஞ்சோழன் - இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்
கோச்செங்கணான் - சங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும்பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை
பெருநற்கிள்ளி -

இடைக்காலச் சோழர்கள்

விசயாலய சோழன்
 தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.பல்லவர்கலுடன் சேர்ந்து போரிட்டான்.

பல்லவ மன்னன் அபராசித வர்மன் திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் I இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது.
 
ஆதித்த சோழன்:
ஆதித்த சோழன் (கி.பி 871 - 907), பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது 
மதுரை கொண்டான் என் அழைக்கப்படுகிறார்..

பராந்தக சோழன்
முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும். ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார்

கண்டராதித்தர் 
இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.

கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தார்.

அரிஞ்சய சோழன்
தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.


சுந்தர சோழன்
இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.
காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, பொன் மாளிகைத் துஞ்சின தேவன் என்றே அழைக்கப்பட்டான்.இரண்டாம் பராந்தகன் எனவும் அழைக்கப்பட்டார்

இராஜராஜ சோழன்
இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான்


இவரின் சிறப்புப் பெயர்களாவன மும்முடிச்சோழன், ஜெயம்கொண்டான், சிவபாதசேகரன், இராஜகேசரி, கேரளாந்தகன், நிகரிலிச் சோழன், நித்யவினோதன், பொன்னியின் செல்வன் மற்றும் கீர்த்தி பராக்கிரமன் ஆகும்
நில அளவை முறையை அறிமுகம் செய்தவர் இவரே.

முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் - இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.

ஆத்துலார்சாலை என்னும் இலவச மருத்துவ மனைகள் தஞ்சாவூரில்இருந்தன

இராசேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது


முதலாம் இராசேந்திரன், வங்காளத்தின் மீது படையெடுத்து அந்நாட்டு மன்னர் மகிபாலனை வென்றார். இவ்வெற்றியின் நினைவாக 'கங்கை கொண்ட சோழபுரம்' என்னும் நகரை நிறுவினார்
கெடா, மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் என்பதே இதன் தமிழ்ப் பெயர்.

இவரின் இயற்பெயர் மதுராந்தகன் ஆகும்
 இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன்,கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான்', 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்தான்
ராஜேந்திர சோழனின் சமாதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தெலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பழங்கால கோவிலில் அமைந்துள்ளது.

இராஜாதிராஜ சோழன்
துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் இறந்தான்.அரசன் இறந்தபோதும், அவனது தம்பியான இரண்டாம் இராஜேந்திரன், போரைத் தொடர்ந்து சாளுக்கியரை முறியடித்தான். அவன் அவ்விடத்திலேயே சோழமன்னனாக முடிசூட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.

இரண்டாம் இராஜேந்திர சோழன்
மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். கீழைச் சாளுக்கியருடனான உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன். 
இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனானான்.

வீரராஜேந்திர சோழன்
இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.

அதிராஜேந்திர சோழன் - கலிங்கத்தை கைப்பற்றினான்

முதலாம் குலோத்துங்கன் - 

இவர் முதலாம் இராசேந்திரனின் மகளான அங்கம்மா தேவின் மகனாவார்.இவர் சோழநாட்டுடன் வெங்கியை இணைத்து, சாளுக்கிய-சோழ மரபைத் தொடங்கி வைத்தார். இவரின் பட்டப்பெயர்களாவன சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள் மற்றும் திருநீற்றுச் சோழன் ஆகும்
கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரனை, பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடவர்ம சுந்தரபாண்டியன் தோற்கடித்தார்