நந்த வம்சம்

  • சிசுங்கமரபைச்சேர்ந்தமன்னனான மகாநந்தி என்பவனுக்கு முறையற்ற விதத்தில் பிறந்த மகாபத்ம நந்தர் என்பவரே நந்தவம்சத்தை தோற்றுவித்தவர்
  • மகாபத்மா நந்தர் ஏகரதன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவர் 
  • மகாபத்ம நந்தரின் அப்பா சத்திரியர் அம்மா சூத்திரர் 
  • நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கிரேக்க, இலத்தீன் நூல்களில் இவர் க்சந்ராமேஸ் (Xandrames) அல்லது அக்ராமேஸ் (Aggrammes) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றான். இவனது கொடுமைகள் காரணமாக மக்கள் இவனை வெறுத்ததாகவும், அதனால் தான் இம் மன்னனை வெற்றிகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் சந்திரகுப்த மௌரியன் கூறியதாக புளூட்ராக் என்னும் நூல் கூறுகிறது.
  • சிசுங்க மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர்களே முதல்வர். இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் இவர்களே என்றும் சொல்லப்படுவது உண்டு. மகத நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அதனை மேலும் விரிவாக்கினர்.
  • மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கி.மு. 326ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
    இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், அலெக்ஸாண்டர்.
  • நந்த வம்சத்தின் இறுதி மன்னனான தனநந்தனுக்கும், பிராமணனாகிய கௌடில்யருக்குமிடையே இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவினால் நந்த வம்சத்தவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது.