சேரர்களின் கொடி விற்கொடி
ஆகும், மாலை : பனம் பூ
மூவேந்தர்களில் ஒருவரான
இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக்
கொண்டிருந்தனர். சில
சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு
ஆண்டனர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்:
ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில்
பெருஞ்சோறு அளித்த சேரன்
பொறையன் மலையன் என்று
இவனைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது
உதியஞ்சேரலின் மக்கள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச்
செல்கெழு குட்டுவனும் ஆவர்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்:
இவனது பெயரில் உள்ள
'பல்யானைச் செல்' என்பது
செல் (மேகம்) போன்று
தோன்றும் இவனது யானைப்படை
பெரும்பல் யானைக் குட்டுவன்
பூழியர் கோ
பொலந்தார்க் குட்டுவன்
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
இவனுக்கும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும்
சோழ மன்னனுக்கும் இடையே
திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடந்தது.
போரில் இருவரும் தம்
படைகளைப் போரிடவேண்டாம் என்று
நிறுத்திவிட்டு, இவ்விருவர்
மட்டுமே ஒருவரை ஒருவர்
தாக்கிக்கொண்டனர். இவ்வாறு
கோரிடும் முறைக்கு ‘அறத்தின்
மண்டுதல்’ என்று பெயர்.
இந்தப் போரில் இருவரும்
போர்க்களத்திலேயே மாண்டனர்.
இவன் மனைவி வேளாவிக்கோமான் பதுமன் என்பவனின்
மகள்
சேரன் செங்குட்டுவன்:
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் எனவும் அழைக்கப்பட்டான்.இவன் அம்மா
சோழன் மணக்கிள்ளி
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்:
குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும்
இவன் மகனாகப் பிறந்தான்
வானவரம்பன் எனவும் அழைக்கப்பட்டான்
சேரமான் பெருஞ்சேரலாதன்:
சேரமான் பெருஞ்சேரலாதன் சங்ககாலச்
சேர அரசர்களில் ஒருவன்.
வெண்ணிப் பறந்தலை என்னுமிடத்தில் இவன் சோழ
அரசன் கரிகாலனைத் தாக்கிப்
போரிட்டுக்கொண்டிருந்தபோது யாரோ
ஒருவர் சேரன் முதுகில்
காயப்படுத்திவிட்டனர்.முதுகில் தழும்புடன் அவன்
வாழ விரும்பவில்லை. போர்க்களத்திலேயே வடக்குத் திசை
நோக்கி அமர்ந்து பாடுகிடந்து உயிர் துறந்தான்.
அந்துவஞ்சேரல் இரும்பொறை:
இரும்பொறை என்னும் மரபைத்
தொடக்கி வைத்தவன் இவனே
மாந்தரஞ்சேரல் இரும்பொறை
மற்றும் வாழியாதன் இரும்பொறை
இவனது மகன்கள்
மாந்தரஞ்சேரல் இரும்பொறை:
சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க
காலச் சேர வேந்தர்களுள் ஒருவன். இவன்,
கருவூரைத் தலைநகராகக் கொண்டு
சேர நாட்டை ஆண்டவன்.
யானை போலப் பெருமித
நோக்கு உடையவன் ஆதலால்
இவனை 'யானைக்கட் சேய்'
என்றனர்.
வாழியாதன் இரும்பொறை:
செல்வக் கடுங்கோ வாழியாதன்
கருவூரைத் தலைநகராகக் கொண்டு
ஆண்ட பொறையர் குடிச்
சேர மன்னர்களில் ஒருவன்.
இவன் பெயர்கள் 4 வடிவங்களில் குறிப்பாடப்படுகின்றன.
சேரமான் கடுங்கோ வாழியாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
சிக்கற்பள்ளித் துஞ்சிய
சொல்வக் கடுங்கோ வாழியாதன்
கோ ஆதன் செல்லிரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை:
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன்
அதியமானை வென்றதன் மூலம்
இவனுக்குத் தகடூர் எறிந்த
என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது
இவன்
குட்டுவன் இரும்பொறை
சேரமான் தகடூர் எறிந்த
பெருஞ்சேரல் இரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
பூழியர் மெய்ம்மறை
கொடித்தேர்ப் பொறையன்
இயல்தேர்ப் பொருநன்
கோதை மார்பன் எனவும்
அழைக்கப்பட்டான்
கருவூரைச் சேர நாட்டின்
தலைநகர் ஆக்கியவன் இவன்
என்றும் கருதப்படுகிறது
சேரமான் கணைக்கால் இரும்பொறை:
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேர அரச மரபைச்
சேர்ந்தவர். இவர் சோழன்
செங்கணான் என்பவரோடு திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போரிட்டு
அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில்
அடைக்கபட்டார். சிறையில்
வாடிய அவர் ஒருமுறை
தாகத்துக்குத் தண்ணீர்
கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக்
குடிக்க மறுத்து ஒரு
செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக
வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்போது
அவர் தனது நிலைக்கு
இரங்கிப் பாடிய இச்
செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது
பாடலாக உள்ளது
குழவி இறப்பினும் ஊன்தடி
பிறப்பினும்
ஆள் அன்று என்று
வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர்
வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும்
அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?
இளஞ்சேரல் இரும்பொறை:
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத்
தமிழகத்தின் சேர நாட்டை
ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான
குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள்
அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன்