குடியரசுத் தலைவர்


  • இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார்.
  • மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார்.  
  • இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்


தகுதிகள்:
35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராவதற்கான தகுதி பெற்றிருக்கவேண்டும்.
ஊதியம் /இலாப பங்கீடு பெற்று எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் பணிபுரியக்கூடாது.

அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க (இந்தியப் பிரதமராக பதவியேற்க) அழைப்பது.
அவரை பிரதம மந்திரியாக நியமித்தல்
பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களை நியமித்தல்
தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாக நிர்வகித்தல்(இதனால் அலங்காரத் தலைவர் எனப்பட்டார்)
பாராளுமன்றத்தைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், அதில் உரையாற்றுதல், பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல் (பிறகே அது சட்டமாகும்)
இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.

கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
மாநில ஆளுநர்.
உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்.
வெளி நாட்டுத் தூதுவர்கள்

மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய(பிரிவு-352), பாராளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க, தேர்தல் நடத்த, அவசர ஆணைகள் பிறப்பிக்க, மாநில அரசைக்கலைக்க(பிரிவு-356), உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.

எண்
பெயர்
பதவி ஏற்றது
பதவிக் காலம் முடிவு
தேர்தல்
1
டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்
ஜனவரி 26,1950
மே 13, 1962
1952,1957
2
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
மே 13, 1962
மே 13, 1967
1962
3
ஜாகீர் உசேன்
மே 13, 1967
மே 3, 1969
1967
*
வி. வி. கிரி
மே 31969
சூலை 201969

*
முகம்மது இதயத்துல்லா
சூலை 201969
ஆகத்து 241969

4
வி. வி. கிரி
ஆகத்து 24,1969
ஆகத்து 241974
1969
5
பக்ருதின் அலி அகமது
ஆகத்து 24,1974
பெப்ரவரி 111977
1974
*
பஸப்பா தனப்பா ஜட்டி
பெப்ரவரி 11,1977
ஜூலை 251977

6
நீலம் சஞ்சீவி ரெட்டி
சூலை 251977
சூலை 251982
1977
7
ஜெயில் சிங்
சூலை 251982
சூலை 251987
1982
8
ரா. வெங்கட்ராமன்
சூலை 251987
சூலை 251992
1987
9
சங்கர் தயாள் சர்மா
சூலை 251992
சூலை 251997
1992
10
கே. ஆர். நாராயணன்
ஜூலை 25,1997
ஜூலை 252002
1997
11
. பி. ஜே. அப்துல் கலாம்
சூலை 252002
சூலை 252007
2002
12
பிரதீபா பட்டீல்
சூலை 252007
சூலை 252012
2007
13
பிரணப் முகர்ஜி
சூலை 252012
பதவியில்
2012


  • இராசேந்திர பிரசாத் India Divided என்ற புத்தகத்தை எழுதினார்
  • நீலம் சஞ்சீவி ரெட்டி போட்டியின்றி தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்.
  • K.R.நாரயணன் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த முதல் குடியரசுத் தலைவர்.