இந்தியக் குடியுரிமை:
இந்திய குடியுரிமையை ஐந்து முறைகளின் பெறலாம்.
பிறப்பு (By Birth)
மரபு வழி (By Descent)
பதிவு (By Registration)
இயல்பூட்டுதல் (By Naturalisation)
பிரதேசங்களின் ஒன்றிணைப்பு (By incorporation of Territories)
குடியுரிமையை இழக்கும் மூன்று முறைகள்
துறத்தல் (Renunciation)
முடிவுக்கு வருதல் (Termination)
நீக்குதல் (Deprivation)
அடிப்படை உரிமைகள்:
அடிப்படை உரிமைகள் என்பவை ஒரு நாட்டு குடிமக்கள் சுதந்தரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள். அடிப்படை உரிமைகள் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பவை.
உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள்:
1. சமத்துவ உரிமை (உறுப்புகள் 14 முதல் 18 வரை)
2. சுதந்திர உரிமை (உறுப்புகள் 19 முதல் 22 வரை)
3. சுரண்டலுக்கு
எதிரான உரிமை (உறுப்புகள் 23 மற்றும் 24)
4. சமய சுதந்திர உரிமை (உறுப்புகள் 25 முதல் 28 வரை)
5. கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள் (உறுப்புகள் 29 முதல் 30 வரை)
6. அரசமைப்பு சார் தீர்வுகள் உரிமை (உறுப்பு 32)
முன்பு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த சொத்துரிமை (உறுப்பு 31) 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 44வது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண அரசமைப்பு உரிமையாக உறுப்பு 300ஏ-யில் வைக்கப்பட்டது.
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி:
குடியரசுத் தலைவர் : 35
ஆளுநர் : 35
லோக்சபா உறுப்பினர் : 25
ராஜ்யசபா உறுப்பினர் : 30
சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
பஞ்சாயத்து உறுப்பினர் : 21
பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்:
உயர் நீதிமன்ற நீதிபதி : 62
உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது
மக்களவை (லோக் சபா)
- மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு ஆங்கிலோ இந்தியர் உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது.
- இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552.
- மக்களவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
- மக்களவையின் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார்.
- மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .
- நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
மாநிலங்களவை (ராஜ்ய சபா)
- மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 250
- மறைமுக தேர்தல் மூலம் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.
- ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர்.
- இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி
- அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்றது
- மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்றது மாநிலங்களவை
- நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் – 50
- எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்
- மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையை சார்ந்தவர்கள்.
- மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் - 1 ஆண்டு
- பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை -22 உறுப்பினர்கள்
- பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 15
- பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை – 7
- இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள் - பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு
- பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 24
- பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை - 45
- பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 21
- அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு - மதிப்பீட்டுக் குழு
- மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு - பொதுக் கணக்கு குழு
- லோக்சபையின் முதல் சபாநாயகர் - ஜி.வி.மாவலங்கார்
- பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் - குளிர்கால கூட்டத்தொடர்
- பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர் - பட்ஜெட் கூட்டத்தொடர்
- பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் -6 மாதங்கள்
- பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்
- பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் -2 முறை