- உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும்.
- அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
- அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
- அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
- அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்
- 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.
- இந்திய அரசமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.
- இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
- இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
- இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர்.
- 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்து தான் பெற்றோம்.
- 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்களிப்பு,
- அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்து பெற்றோம்.
- அரசியல் சட்டத்திருத்த முறையை தென் ஆப்ரிக்காவிடம் இருந்து பெற்று திருத்தினோம்.
- ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்து கடனாக பெற்றோம்.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு:
1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee)உருவாக்கப்பட்டது.
பீ. இரா. அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே.எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)
உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
உறுப்பு 5 - 11: குடியுரிமை
(Citizenship)
உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள்.
(Fundamental Rights)
உறுப்பு 14: சமத்துவ உரிமை.
உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
உறுப்பு 25: சமய உரிமை.
உறுப்பு 36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies)
உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental
Duties)
உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
உறுப்பு 110: பண மசோதா (Money Bill
)
உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint
Sitting)
உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual
Budget)
உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
உறுப்பு 280: நிதி ஆணையம்
உறுப்பு 300A: சொத்துரிமை
உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency
Provisions)
உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial
Emergency)
உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் ( Amendments
to the constitution)
உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்
முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்:
முதல் திருத்தம் (1951)- ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.
ஏழாவது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.
14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.
21-வது திருத்தம் (1967) - எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.
26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது. அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.
44-வது திருத்தம் (1978) - சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.
52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
58-வது திருத்தம் (1987) - ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
61-வது திருத்தம் (1989) - வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.
69-வது திருத்தம் (1991) - டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.
71-வது திருத்தம் (1992) - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ்.
74-வது திருத்தம் (1994) - நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.
76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.
84-வது திருத்தம் (2001) - லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.
860வது திருத்தம் (2002) - கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A
க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.
பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.
87-வது திருத்தம் (2003) மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.
91-வது திருத்தம் (2003) மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.
92-வது திருத்தம் (2003) போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
93-வது திருத்தம் (2005) பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
94-வது திருத்தம் (2006) மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.
96-வது திருத்தம் (2011) இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் 'ஒரியா’ மொழியின் பெயர் 'ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.
97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19
(1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு 43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX B-யை (கூட்டுறவு சங்கங்கள்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
98-வது திருத்தம் (2013) – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 371Eயை புதிதாக சேர்த்தது.
8, 23, 45,
65, 79, 95-வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.