இந்தியப் பிரதமர்


பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாதபோது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
  • இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சாரிலால் நந்தா, . கே. குஜரால், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள். 
  • இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) உத்தரப் பிரதேச மாநில அலகாபாத் நகரில் பிறந்தவர்கள்.
  •  இந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்

பெயர்
பதவி ஏற்றது
பதவி முடிவு
மேலும்
ஜவகர்லால் நேரு
15 ஆகத்து 1947
27 மே 1964
1952, 1957,1962 மூன்று முறை பிரதமராக இருந்தார்.
குல்சாரிலால் நந்தா
27 மே 1964
9 சூன் 1964
நேரு இறந்ததால் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
லால் பகதூர் சாஸ்திரி
9 சூன் 1964
11 சனவரி 1966
ரஷ்யவின் தாஷ்கன்ட்டில் அமைதி மாநாட்டின் போது மாரடைப்பால் மரணம்
குல்சாரிலால் நந்தா
11 சனவரி 1966
24 சனவரி 1966
சாஸ்திரி இறந்ததால் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
இந்திரா காந்தி
24 சனவரி 1966
24 மார்ச் 1977

மொரார்ஜி தேசாய்
24 மார்ச் 1977
28 சூலை 1979
ஜனதா கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரண் சிங் தலைமையில் பிரிந்து சென்றதால் பதவி விலகல்
சரண் சிங்
28 சூலை 1979
14 சனவரி 1980
காங்கிரசு ஆதரவை விலக்கிக் கொண்டதால் மக்களவையை சந்திக்காமலேயே பதவி விலகல்
இந்திரா காந்தி
14 சனவரி 1980
31 அக்டோபர் 1984
புளூஸ்டார் நடவடிக்கை நடத்தியதனால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி
31 அக்டோபர் 1984
2 திசம்பர் 1989

வி. பி. சிங்
2 திசம்பர் 1989
10 நவம்பர் 1990
ராம ஜன்மபூமி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றது.
சந்திரசேகர்
10 நவம்பர் 1990
21 சூன் 1991
முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டின் பேரில் பதவி விலகினார், மேலும் காங்கிரசு தனது ஆதரவை விலக்கிக்கொண்டது;
பி. வி. நரசிம்ம ராவ்
21 சூன் 1991
16 மே 1996
தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் (ஆந்திரப் பிரதேசம்).

அடல் பிகாரி வாச்பாய்
16 மே 1996
1 சூன் 1996
 13 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். ஆட்சியமைக்க பாஜக வால் ஆதரவு திரட்ட இயலவில்லை.
தேவ கௌடா
1 சூன் 1996
21 ஏப்ரல் 1997
பாஜக வின் அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தபின்னர், காங்கிரசும் ஆட்சியமைக்க மறுத்து விட்டது. காங்கிரசு ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது.
. கே. குஜரால்
21 ஏப்ரல் 1997
19 மார்ச் 1998
தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. பின்பு விலக்கி கொண்டது.
அடல் பிகாரி வாச்பாய்
19 மார்ச் 1998
22 மே 2004
 இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியைச் சேராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே
மன்மோகன் சிங்
22 மே 2004
26 மே 2014

நரேந்திர மோதி
26 மே 2014