அம்பேத்கர்



பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
மற்ற பெயர்கள் : பாபா சாகேப், பாபா, பீமா, மூக்நாயக்
காலம் : 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956

  • நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். 
  • ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி எனவும் புகழப்படுகிறார்
  • 1921இல் Provincial Decentralisation of Imperial Finance in British India (பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை மாநில வாரியாகப் பிரித்தளித்தல்) என்ற தலைப்பின்கீழ் M.Sc. பட்டம் பெற்றார்.
  •  1922இல் The Problem of the Rupee (ரூபாய் பற்றிய பிரச்சனை) என்ற ஆய்வுக்கட்டுரை எழுதி D.Sc. பட்டம் பெற்றார்.
  • ஜெர்மனி Bon (பான்) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் சமஸ்கிருதம் படித்தார். இந்தியாவில் யாரும் சொல்லித்தர முன்வரவில்லை. 
  •  'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்
  • இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்
  • இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

  1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்என்று கூறிச் சென்றார். இரண்டாவதுவட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

அம்பேத்கர் எழுதிய புத்தகங்கள்:
1. இந்தியாவில் துண்டு நிலங்களும் அவற்றிற்கான தீர்வுகளும் (Small holdings in India and their remedies)
2.புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) 
3.யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?)
4.புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது

பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்கள்:
1. கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company)
2.பிரித்தானியஇந்தியாவின்மாகாணங்களின்நிதியின்பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
3.ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்