நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
இதனால் இது ‘நாலடி நானூறு’ எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு
இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு
தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும்,
செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.
(பொருள்.)நாய்க்கால்
சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்
நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிக நெருக்கமுடையாராயினும்
ஓர் ஈக்காலினளவும் உதவி செய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?; சேய்த்தானும்
சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - கழனி,
முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்த இயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்
அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.