குஷானப் பேரரசு



  • மெளரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவிலும் நிறுவப்பட்ட வலிமையான அரசு - குஷானப் பேரரசு
  • குஷானர்கள் - யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினர்.
  • முதலாம் காட்பிஸஸ் - இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் குஷான பேரரசை கி.பி.முதலாம் நூற்றாண்டில் நிறுவினார்.
  • இரண்டாம் கட்பிஸஸ் (கி.பி.65-75) பஞ்சாப்பையும் கங்கைச் சமவெளியையும் கைப்பற்றினார்.
  • கனிஷ்கர் (கி.பி.78-101) இரண்டாம் கட்பிபஸஸிற்கு பிறகு ஆட்சி பீடம் ஏறினார்.
  • குஷான அரசின் தலைசிறந்த மன்னன் கனிஷ்கர்.
  • கனிஷ்கர் சாக சத்திரபர்களை அடிபணிய வைத்தார்.
  • கனிஷ்கர் சீனாவுடனான முதல் போரில் சீனத்தளபதியான பாஞ்ஞோவிடம் தோற்றார்.
  • கனிஷ்கரின் தலைநகரம் - புருஷபுரம்,இப்போது பெஷாவர்
  • காஷ்மீரில் நான்காவது பெளத்த மாநாட்டை கூட்டியவர் - கனிஷ்கர்.
  • வசுபந்து, அசுவகோஷர், நாகார்ஜூனர் நான்காவது பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் ஆவர்.
  • நான்காவது பெளத்த மாநாட்டில் பெளத்தத்தில் தோன்றிய பிரிவு - மகாயாணம்
  • புத்த சரிதம், சூத்திரலயங்காரம் போன்ற நூல்களை எழுதியவர் - அசுவகோர்
  • வசுவமித்திரர் தொகுத்த சாத்திர நூல் - மகாவிபாசா
  • கனிஷ்கர் அவையில் இருந்த மருத்துவ அறிஞர் - சரகர்
  • கனிஷ்கர் அவையில் இருந்த கிரேக்கக் கட்டிடக்கலை வல்லுநர் - எஜிலைஸூம்
  • இந்திய கிரேக்க நுட்பங்கள் இணைந்த கலைக்கு காந்தாரக்கலை என்று பெயர்.
  • பெளத்த மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டால் கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார்.
  • கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை வைத்து சகசகாப்தம்(கி.பி.78) என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று