அண்டம்



  • அண்டம் இப்படித்தான் தோன்றி இருக்க வேண்டும் என்று இப்போது பல அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த கோட்பாட்டுக்கு big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு) என்று பெயரிட்டு உள்ளனர்.
  • சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் நான்கு சிறிய அகக்கோள்களாகும், அவையாவன: புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் போன்றவையாகும்.
  •  இவைகள் உட்பிராந்தியக் கோள்கள் (terrestrial planets) எனவும் அழைக்கப்பட்டன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்களால் உருவானவையாகும். அத்துடன் இவை புறக்கோள்களை விட சிறியனவாகவும், சூரியனுக்கு மிகவும் அண்மையில் உள்ளனவாகவும் அதிகுறைந்த எண்ணிக்கையிலான துணைக்கோள்களைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன
  •  ஏனைய நான்கு கோள்களும் புறக்கோள்கள் எனப்படுகின்றன. அவையாவன: வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவையாகும். இவற்றில் ஐதரசன் மற்றும் ஈலியம் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையாலே இவற்றை வளிமப் பெருங்கோள்கள் எனவும் அழைப்பதுண்டு.
  •  இவை அகக்கோள்களிலும் பார்க்க திணிவில் பெரியவையாகக் காணப்படுகின்றன; அவற்றிலும் முக்கியமாக மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பிரதானமாக ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்றவற்றால் ஆக்கப்பட்டுள்ளது, எனினும் மற்றைய புறக்கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பதார்த்தங்களால் ஆக்கப்பட்டவை. பொதுவாக சூரியனை சூழவுள்ள வான்பொருட்கள்; முக்கியமாகக் கோள்கள், அனைத்தும் தனித்தனி நீள்வட்ட வடிவமான பாதைகளிலேயே (Orbital path) சூரியனை சுற்றிவருகின்றன.
கோள்கள்
வரிசை
தன்னை தானே சுற்றிக்கொள்ளும் காலம்
சூரியனை சுற்றும் காலம்
துணைக்கோள்களின் எண்ணிக்கை
மேலும்
புதன்(Mercury)
1
58.6  நாள்கள்
88 நாள்கள்
0
செயற்கை துணைக்கோள் மெசஞ்சர்
மிகச் சிறிய கோள்
பனிக்கட்டி உள்ளது
வெள்ளி(Veenus)
2
243 நாள்கள்
224.7 நாள்கள்
0
பைங்குடில் விளைவால் உருவானது
பூமியின் சகோதரி கோள்
நிலவுக்கு அடுத்து ஒளி மிகுந்தது
1
நாள் = 1ஆண்டு
பூமி
3
24 மணித்துளி
365.25நாள்கள்
1
சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகிறது
செவ்வாய்(Mars)
4
24 மணித்துளி 40 நிமிடம்
686.98 நாள்கள்
2
சிவப்புக்கோள் - காரணம் இரும்பு ஆக்சைடு
துனைக்கோள்கள்: போபோசு,டெய்மோசு
செயற்கை துணைக்கோள் அமெரிக்காவின் பாத் பைண்டர்,ரோவர், பிரிட்டனின் பீகிள்2
வியாழன்(Jupiter)
5
9 மணித்துளி 56 நிமிடம்
4332.59 நாள்கள்
63
மிகப் பெரிய கோள்
வாயுக்கள் திரண்டது
சூரிய குடும்பத்தின் பெரிய நிலா கானிமீடு
சனி(Saturn)
6
10மணி 39நிமிடம்
29.5ஆண்டுகள்
60(150 க்கு மேல்)
இரண்டாவது சிறிய கோள்
சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய நிலா டைட்டன்
சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது
அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன.
யுரேனஸ்
7
17மணி 14நிமிடம்
84.3 ஆண்டுகள்
27
கண்டுபிடுத்தவர்:வில்லியம் செர்சல்
நிலவுகளுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ள
நெப்டியூன்
8
16மணி 6நிமிடம்
164.8ஆண்டுகள்
13 
ட்ரைட்டன் நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது.
புளூட்டோ



5
சூரியக் குடும்பத்தில் ஏரிசுவை அடுத்து இரண்டாவது பெரிய குறுங்கோள்
புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.
நியூ ஹரிஜான் என்ற செயற்கைகோள்