- மராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு (Maratha Empire) தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் [[1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவாஜியால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான பேஷ்வாக்களால் விரிவாக்கப்பட்டது. 1761 இல் பானிப்பட் நகரில் ஆப்கானிய மன்னன் அகமது ஷா அப்தாலியுடன் இடம்பெற்ற சண்டையில் தோல்வியடைந்ததை அடுத்து மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மரத நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்து, பின்னர் 1818 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் வீழ்ந்தது.

- சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார்.
- பிஜாப்பூர் சுல்தானியம், தக்காண சுல்தானியர்கள் மற்றும் மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.
- ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்
- மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார்.
- அவரின் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்
- அமைச்சரவை 8 அமைச்சர்களை கொண்டது இது "அஷ்டபிரதான்" என்றும் அழைக்கப்பட்டது
- சிவாஜியின் பேரரசு சுயரஜ்ஜியம் என்று அழைக்கப்பட்டது
பிரதாப்கட் போர்
கோல்ஹாபூர் போர்
பன்ஹாலா முற்றுகை
பவன்கிண்ட் யுத்தம்
சின்ஹாகட் யுத்தம்
சிவாஜி ஓர் இரத்தபெருக்கு நோயான இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸினால் இறந்ததாக கூறப்படுகிறது.
அவரின் இறுதிச்சடங்கு அவர் மகன் ராஜாராம் மற்றும் மனைவி சோயராபாய் முன்னிலையில் ராய்கட்டில் நடைபெற்றது.
ஒரு சிறிய போராட்டத்திற்கு பின்னர் சாம்பாஜி சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்
பேஷ்வா (Peshwa) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். சத்ரபதி சிவாஜி தான் முதன் முதலில் அரசவையில் பேஷ்வா எனும் பதவியை உருவாக்கினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர் வழிவழியாக இவர்கள் மராட்டியப் பேரரசைத் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். நானா சாகிப் கடைசி பேஷ்வாவான பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர்
பேஷ்வா (Peshwa) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். சத்ரபதி சிவாஜி தான் முதன் முதலில் அரசவையில் பேஷ்வா எனும் பதவியை உருவாக்கினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர் வழிவழியாக இவர்கள் மராட்டியப் பேரரசைத் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். நானா சாகிப் கடைசி பேஷ்வாவான பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர்