முகலாயப் பேரரசு
உச்ச
நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம்
என்று
அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும்
பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு
பகுதி,
பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி
1526 தொடக்கம், 1712 வரையான
காலப்பகுதியில் இந்த
அரசு
நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக/துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர்,
1526 ஆம்
ஆண்டில் கடைசி
டில்லி
சுல்தானான, இப்ராஹிம் லோடி
என்பவரை, முதலாவது பானிபட் போரில்
தோற்கடித்து முகலாய
அரசைத்
தோற்றுவித்தார்.
பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய
மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர்
ஷா
சூரி
என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர்
காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு
விரிவடைந்த இப்
பேரரசு,
ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை
தொடர்ந்து விரிவடைந்து சென்றது.
பாபர்
1526 1530
ஹுமாயூன்
1530 1540
இடையீடு
*
1540 1555
ஹுமாயூன்
1555 1556
அக்பர்
1556 1605
ஜஹாங்கீர்
1605 1627
சா
சகான்
1627 1658
ஔரங்கசீப்
1658 1707
முதலாம் பகதூர்
ஷா
பாபர்:
- பாபர் (Babur) எனப்படும் சாகிருதீன் பாபர், அல்லது சாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.
- தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்- அரச குலம் தைமூரிய வம்சம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார்.
- முகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதியை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். இதனால் ஏற்பட்ட முதல் பானிப்பட் போரில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தான் இப்ராஹிம் லோடியின் சேனையை வென்று முகலாயப் பேரரசை தோற்றுவித்தார். இராசபுத்திரர்களையும் ஆப்கானியர்களையும் வென்று வட இந்தியாவில் பேரரசர் ஆனார்.
- இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
ஹுமாயூன் (நசிருதீன் உமாயூன்)
நசிருதீன் அமாயூன் (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட
இந்தியா ஆகியவற்றை ஆண்ட
இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார்.
இவர்
இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின்
மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இடையில் ஷேர்கானிடம் தோல்வி
அடைந்தார். இவருக்கு அடுத்து இவரது
மகன்
அக்பர்
ஆட்சிக்கு வந்தார்
ஷெர்கான்
இயற்பெயர் : ஷெர்ஷா
வம்சம் : சூர் வம்சம்
- சௌசா என்னுமிடத்தில் நடந்த போரில் உமாயூனை தோற்கடித்தார்.
- ஷெர்ஷா பேரரசை பல சர்க்கார்களாக பிரித்தார்.சர்க்கார்கள் பல பர்கானாக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பர்கானாவும் பல கிராமங்களை கொண்டது
- இரயத்து வரியை அறிமுகப் படுத்தினார்
- இவரின் நில சீர்திருத்த முறையை அக்பர் பின்பற்றினார். எனவே இவர் “அக்பரின் முன்னோடி” எனவும் அழைக்கப்படுகிறார்
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்
- டெல்லியில் புகழ் பெற்ற புராணாகிலா என்ற கட்டிடத்தை கட்டினார்
அக்பர்
- ஜலாலுதீன் முகமது அக்பர் ஜலால் உத்-தீன் முகம்மத் அக்பர்), அல்லது பேரரசர் அக்பர் (Akbar, 14 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605),[3][4] முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர்,
- இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர்.
- முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற இரண்டாம் பானிபட் போரில் 1556 இல் தோற்கடித்தன.
- பேரரசர் அக்பர் வலிமையான ராஜபுத்திர இன இளவரசிகளை மணந்து அதன் மூலம் நட்பை பலப்படுத்தினார்
- அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா, அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும்.
- அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் .
- அக்பருடைய ராணுவ நிர்வாக முறை மன்சப்தாரி முறை.
- நிர்வாகத்திற்காக பேரரசு பல மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. இவை சுபா எனப்பட்டன. சுபாவை நிர்வகிப்பவர் சுபேதாரி.சுபா பல சர்க்கார்களாக பிரிக்கப்பட்டது
ஜிஸ்யா வரி
ஜிஸ்யா
எனும்
வரி
1562 - ல்
முடிவுக்கு கொண்டு
வரப்பட்டது. ஆனால்
அவை
மீண்டும் 1575 -ல்
கொண்டு
வரப்பட்டது. மீண்டும் அது
1580 -ல்
வரி
விதிக்கப்பட்டது.[47] இந்த
வரியானது முஸ்லிம் அரசர்களால் ஒரு
ஆயுதமாக இந்துக்கள் இஸ்லாமியத்தை தழுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இது
இந்துக்களின் மீது
விதிக்கப்பட்ட வரியாக
உள்ளது.
முஸ்லிம்களுக்கு இந்த
வரி
கிடையாது.
பைராம் கான்
அக்பர்
ஆட்சி
பொறுப்பை ஏற்கும் போது
13 வயது
நிரம்பியவராக இருந்தார்.ஆதலால்
அவருடைய படைத்தளபதி அவர்
சார்பாக அக்பர்
குறித்த வயது
வரும்
வரை
ஆட்சி
பொறுப்பை நடத்தினார். பைராம்
கான்
பாதக்ஷானின் டர்கி
மொழி
பேசும்
இனத்தவரான அவர்
அக்பரின் அரசாட்சிக்கு ஏமாற்றுகாரர்களால் ஏற்பட்ட இடையூறுகளை வெற்றிகரமாக கையாண்டார் .
ஜஹாங்கிர்:
- நூருத்தீன் சலீம் ஜஹாங்கிர் (செப்டம்பர் 20, 1569 – நவம்பர் 8, 1627) (OS ஆகஸ்ட் 31, 1569 – NS நவம்பர் 8, 1627) 1605 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை முகலாயப் பேரரசராக இருந்தார். ஜஹாங்கிர் என்ற பெயர் பெர்சிய மொழியில் இருந்து வந்ததாகும். இதற்கு "உலகத்தின் வெற்றியாளர்" எனப்பொருளாகும்.
- ஜஹாங்கிர் தங்கத்தால் ஆன அவரது "நீதியின் சங்கிலிக்காக" பெரிதும் புகழ்பெற்றிருந்தார். ஜஹாங்கிர் மக்களுக்கும் தனக்கும் இடையில் சங்கிலிப் பிணைப்பை அமைத்திருந்தார். அறுபது மணிகளைக் கொண்ட ஆக்ரா அரண்மனையின் வெளியில் இருந்து எவரும் அந்த சங்கிலியை இழுக்க முடியும். அந்த சத்தத்தை ஜஹாங்கிர் தனிப்பட்ட முறையில் கேட்க முடியும்.
- வில்லியம் ஹக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ முதலிய இங்கிலாந்து வணிகர்கள் ஜஹாங்கிரின் அரசவைக்கு வருகை புரிந்தனர்
ஷாஜகான்:
- ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியின் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது. பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார்.
- குர்ராம் என்பது இவரின் இயற்பெயர் ஆகும்
- ஷாஜகான் காலம் மொஹலாயர்களின் பொற்காலம் எனப்படுகிறது
- 1658 ஆம் ஆண்டில் அவர் நோய்வாய்ப்பட்டார், 1666 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரையில் அவருடைய மகன் ஔரங்கசீப்-ஆல் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப்பட்டார்.
- ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார், அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது, ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால், இது அவருடைய மனைவி மும்தாஜ் மஹால்-இன் (பிறப்பு பெயர் அர்ஜுமண்ட் பானு பேகம்) கல்லறையாக தலைம சிற்பி "உஸ்தாத் இஷா" என்பவரால் கட்டப்பட்டது.
- அவர் மயில் சிம்மாசனம் "தக்த் ஈ தௌஸ்-ஐக்" கூட வைத்திருந்தார், அது அவருடைய ஆட்சியைக் கொண்டாடுவதற்காகச் செய்யப்பட்டது.
ஔரங்கசீப்
- ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார்.
- இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும்.
- முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
- சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால் மராட்டியர் நட்டை பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியை சிறை பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழக்த்தில் இருந்த செஞ்சி கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளை பிடிக்க எண்ணி முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.
- அவுரங்கசீப்பின் தளபதி, சூல்பிகார் கான் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (நவாப்) ஆக்கினார். வெற்றிக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக ஐதராபாத் என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக(நிஜாம்=நிசாம்) இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர். செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்தால், ஜீல்பிகார் கான் கர்நாடக நவாபு என்றே அப்போது அழைக்கப்பட்டார்.பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக (நவாப்) வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்கு பதிலாக, ஆற்காட்டை தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார்.
முதலாம் பகதூர் சா:
முதலாம் பகதூர்
சா
1707 ஆம்
ஆண்டு
முதல்
1712 வரை
இந்தியாவை ஆட்சி
செய்த
முகலாயப் பேரரசராவார். இவரது
இயற்பெயர் குதுப்
உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது
தந்தையார் இவருக்கு சா
ஆலம்
என்னும் பெயரைக் கொடுத்தார். இவர்
பதவி
ஏற்றபோது பகதூர்
சா
என்பதைத் தனது
அரியணைப் பெயராக
ஏற்றுக்கொண்டார்.
இவரது
இறப்புக்குப் பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.
முகலாய பேரரசர்களின் சமாதிகளும் இடங்களும்:
பாபர் – காபூல்
ஹுமாயுன் – டெல்லி
அக்பர் – சிக்கந்தரா
ஜஹாங்கீர் – ஷாதரா(லாகூர்)
ஷாஜஹான் – தாஜ்மகால் ஆக்ரா
ஒளரங்கசீப் – ஒளரங்காபாத்