"ரேஹத் மர்யாதா" நூலின் (சீக்கிய நடத்தை வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கைகள்) முதல் சட்டத்தின்படி, ஒரு சீக்கியர் என்பவர், "ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் தேவ் முதல் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும்; ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் சொற்களையும் போதனைகளையும், எந்த மதத்துடனும் இணைய விரும்பாத பத்தாவது குரு விட்டுச்சென்ற ஞானத்தையும் முழுமனதாக நம்பும் ஒரு மனிதனாவான்
ஐந்து Kக்கள், அல்லது பஞ்ச காக்கர்/காக்கி என்பது, எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களுக்குமான (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமான ஐந்து பொருட்களாகும், இவற்றை பொதுவாக எல்லா நேரங்களிலும் ஒருவர் அணிந்திருக்க வேண்டும்,
கேஷ் (வெட்டப்படாத முடி, பொதுவாக கட்டப்பட்டு, சுருட்டி சீக்கிய தலைப்பாகை, டாஸ்டர் என்பதன் கீழ் வைக்கப்படும்.)
கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக டாஸ்டாரின் கீழ் அணியப்படும்.)
கச்சாஹெரா (பொதுவான இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)
கடா (இரும்பாலானா கையணி, இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை டாஸ்டரில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)
கிர்ப்பான் (வளைந்த கத்தி)
அமிர்தரசஸ் பொற்கோயில் சீக்கியர்களின் புனித தலமாகும்
குரு நானக்(15 ஏப்ரல் 1469 - 22 செப்டம்பர் 1539) சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்
அவர் பிறந்தநாள் "குரு நானக் தேவ் பிரகாஷ் திவாஸ்" எனக் கொண்டாடப்பட்டு வருகிறது
குரு நானக்,16 வயதில் மாதா சுலக்கினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணம் பட்டாலா நகரத்தில் நடைபெற்றது. பெண் வீட்டார், சுல்தான்பூர் லோதி நகரத்தில் இருந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்,ஸ்ரீ சந்த் மற்றும் லக்ஷ்மி சந்த் பிறந்தனர்.
குரு நானக் அவருக்கு அடுத்து, குருவாக் பை லென்னா என்பவரை "குரு ஆங்க்" என மறுபெயரிட்டு அவரை நியமித்தார். விரைவில், அடுத்த குரு என பாய் லென்னா பிரகடனப்படுத்தியதுக்கு பிறகு, ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி 70 வயதில், கர்த்தார்பூரில், 22 செப்டம்பர் 1539 அன்று கடவுளுடன் (ஜோதி ஜொயொத் சமயி) இணைந்தார்