பாண்டியர்



தலைநகரம்: கொற்கை பின்பு மதுரை

கொடி : மீன் கொடி மாலை: வேப்பம் பூ மாலை

பாண்டியர் பெயர்கள்

பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம், குடுமி குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்

இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர்.



தமிழ் நாட்டை களப்பிரர்கள் கைப்பற்றியபோது முற்கால பாண்டியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

பாண்டிய அரசன் கடுங்கோன் களப்பிரர்களை கிபி6 ம் நூற்றாண்டின் இறுதியில் வென்று முதலாம்பாண்டிய பேரரசை நிறுவினார்.


உத்திரமேரூர் கல்வெட்டுக்கள், சித்தன்னவாசல் பாண்டியர்களின் ஓவியத்தை பறை சாற்றுகிறது.


பாண்டியர் ஆட்சி காலத்தில் வேளாண்தொழில் செய்பவர்கள் “பூமி புத்திரரகள்” என்று அழைக்கப்பட்டனர்


முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் “ சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்” என அழைக்கப்பட்டார்

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியன்”, பொன்வேய்ந்த பெருமாள்'திரிபுவன சக்ரவர்த்தி' மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன் என அழைக்கப்பட்டார்

முதலாம் மாறவர்மன் குலசேகரன் “கொல்லம் கொண்ட பாண்டியன்” என அழைக்கப்பட்டார்.

முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சிக் காலத்தில் தான் உலகப் புகழ் பெற்ற வெனிஸ் நகரப் பயணியான மார்கோபோலோவும், முஸ்லீம் வரலாற்று ஆசிரியரான வாசப் என்பவரும் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தனர்
 

இலக்கியம்:
திருவாசகம் – மாணிக்கவாசகர்
ஆண்டாள் – திருப்பாவை
நம்மாழ்வர் – திருப்பல்லாண்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகாபாரதம்
அதிவீரராம பாண்டியன் -  நைடதம்
ஸ்ரீகவிராயர் – சேயூர் முருகன் உலா,ரத்தினகிரி உலா