வளிமண்டலம்



புவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

அடிவளிமண்டலம் (Troposphere)
படைமண்டலம் (Stratosphere)
இடை மண்டலம் (mesosphere)
வெப்ப மண்டலம் (thermosphere)
புறவளி மண்டலம் (exosphere)

அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்
படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும்.
இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது.
வெப்ப மண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும்