ஹர்ஷர்


ஹர்ஷர் அல்லது ஹர்ஷவர்தனர் (590–647) வட இந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு இந்தியப் பேரரசர். இவருடைய தந்தை பிராபாகரவர்தனர். இவருடைய அண்ணன் ராஜ்யவர்தனர் தானேஸ்வரத்தின் அரசர். இவர் தன் ஆட்சியின் உச்சத்தில் பஞ்சாப், வங்காளம், ஒரிசா, சிந்து கங்கைச் சமவெளி முழுவதையும் ஆண்டு வந்தார். தெற்கே நர்மதை நதி வரை இவருடைய ஆட்சி இருந்தது.

ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியா முழுதும் குப்த பேரரசு வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. ஹர்ஷர் பஞ்சாபிலிருந்து மத்திய இந்தியாவரை இணைத்தார். இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி606 ஏப்ரலில் ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர்

கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரவர்த்தனர் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது, அவரை தொடர்ந்து ஆதித்யவர்த்தனரும்,பிரபாகவர்த்தனரும் ஆட்சி செய்தனர்,பிரபாகவர்த்தனரின் மறைவுக்கு பின்னர் இராஜ்ய வர்த்தனர் அரியனை ஏறினார். ஹீனர்களை (ஊனர்கள்) அடக்கி தானேசுவரத்தை கைபற்றினார்,அதே சமயம் மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரி ராஜ்ஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயையும் தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்.அதை அறிந்த ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான்,ஆனால் அதன் பின் சில சூழ்ச்சியால் சசாங்க மன்னனால் கொல்லப்பட்டான்.அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்,ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிவாங்கி தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டான்.

  • அதுவரை தானேசுவரத்தை தலைநகராக கொண்டு தான் அனைவரும் ஆட்சி செய்து வந்தனர்,ஆனால் ஹர்சர் கன்னோசியையும் அதனுடன் இனைத்து மாபெறும் சாம்ராச்சியத்தை உருவாக்களானான்
  • தானேஸ்வர் தொன்மையான இந்து யாத்திரை மையமும், 51 சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுமான இவ்விடம் இன்று ஹரியானா மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குருக்சேத்திரா என்னும் நகருக்கு அண்மையில் ஒரு சிறு நகரமாக உள்ளது
  • இவர் புத்த மதத்தை தழுவலானார்
  • வடஇந்தியாவின் முக்கிய நகரமாகி புத்தர் காலத்து பாடலிபுத்திரத்தின் இடத்தை பிடித்தது ஹர்சரின் தலைநகர் கன்னோசி, 10,000 க்கும் மேற்பட்ட இரு புத்த சமய துறவிகள் இங்கு வாழ்ந்து வந்தனர்
  • சீன நாட்டு யுவான் சுவாங்கை வரவேற்று உபசரித்தார்
  • ஹர்ச சரிதத்தையும், காதம்பரி போன்ற அற்புத நூல்களை படைத்த பாணபட்டர் ஹர்சரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இவரின் இலக்கிய ஆர்வம் இதிலிருந்தே தெரிகிறது
  • மேலும் ஹர்சரே ஒரு சிறந்த நாடகாசிறியர் ஆவார்,நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகியன இவரே எழுதிய நாடகங்கள்
  • ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும்,யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை
  • ஹர்ஷர் பெளத்த மாநாட்டை கூட்டிய இடம் - கன்னோசி, பிரயாகை
  • ஹர்ஷரைசகோலதாரபதநாதாஎன்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.