பௌத்த சமயம்


பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும்.
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.

தமிழில் பெளத்தம் நோக்கிய ஆக்கங்கள்:
மணிமேகலை
குண்டலகேசி
வீரசோழியம்

கௌதம புத்தர்:
  • கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர்
  • பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் ததாகதர் என்றும் அழைக்கப்பட்டார்
  • சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார்.
  • சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்.
  • தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார்.
  • இறப்பு - குஷிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா

ஹீனயானம் - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள், உருவ வழிபாடுசெய்யாதவர்கள்

மகாயானம் - புத்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள், உருவ வழிபாடு செய்பவர்கள்




புத்தரின் போதனைகளின் சாரம்சம் நான்கு சிறந்த உண்மைகள் மற்றும் அட்டசீலம் என்ற எண்வழிப்பாதையில் அடங்கியுள்ளது


புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும்.பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்றுவகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், வினையபிடகம், அதிதருமபிடகம் என்பவையாகும்.

புத்த மதத்தினரின் நான்கு புனித யாத்திரைத் தலங்கள் லும்பினி, குஷிநகர், புத்த காயா, சாரநாத் என்பனவாகும்

புத்தரின் கூற்றுப் படி ஒவ்வொரு புத்தரும் தம் பிறவியில் இரண்டு முதன்மைச் சீடர்களையும் ஒரு அணுக்கச் சீடரையும் கொண்டிருப்பர். அந்த வகையில் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களாக சாரிபுத்ரரும் மொக்கல்லானரும் விளங்கினர். அணுக்கச் சீடராக ஆனந்தர் விளங்கினார்.

ஆனந்தர் புத்தரின் அணுக்கச் சீடர் ஆவார். புத்தரின் உறவினரான இவர் அவருடன் சேர்ந்து பல பகுதிகளுக்கும் சென்றவர்; புத்தர் பேசியவற்றை மனதில் நிறுத்திக் கொண்டவர். சுத்த பிடகத்தில் உள்ள பல சூத்திரங்கள் இவரால் நினைவிலிருந்து கொண்டு வரப்பட்டவையே. முதல் பௌத்தப் பெருங்குழுமத்தில் புத்தரின் போதனைகள் பலவற்றையும் இவரே நினைவுகூர்ந்து கூறினார். இதன் காரணமாக இவர்தம்மத்தின் பாதுகாவலர்என அறியப்படுகிறார்.

முதல் புத்த மாநாடு: கிமு487
முதல் புத்த மாநாடு அஜாதசத்ரு என்னும் மன்னனால் மஹாகசிபர் என்னும் புத்த துறவியின் முன்னிலையில் ராஜ்கிர் (பீஹாரில் உள்ள பகுதி) என்னும் இடத்தில் நடத்தப்பட்டது

இரண்டாவது புத்த மாநாடு:கிமு387
இடம்: வைசாலி
மன்னர்: காகவர்ணன் காலசோகன்
தலைமை:சபகமி

மூன்றாவது புத்த மாநாடு:கிமு251
அசோகர் பாடலிபுத்திரத்தில்(தற்போதைய பாட்னா) மூன்றாவது புத்த மாநாட்டை  நடத்தினார் இந்த மா நாட்டிற்க்கு தலைமை வகித்தவர் உபகுப்தர்  மொகலிபுட்ட டிஸ்ஸா (Moggaliputta Tissa)  என்னும் புத்த துறவி  
அசோகர்  ஆதரித்த புத்தமத பிரிவு ஹீனயானம்

நான்காவது புத்த மாநாடு:கிமு100

குஷாண் அரசஙன் கனிஷ்கர்  காஷ்மிர் அல்லது ஜலந்தரில்(குண்டலி வனத்தில்)  நான்காவது புத்த மாநாட்டை  நடத்தினார் இந்த மாநாட்டிற்க்கு தலைமை வகித்தவர்   வசுமித்ரா   என்னும் புத்த துறவி  
கனிஷ்கர்  ஆதரித்த புத்தமத பிரிவு மஹாயானம்