ஆடி

கண்ணாடியின் உட்பொருட்கள் – சிலிகா, கால்சியம் கார்பனேட், சோடியம் கார்பனேட்
கண்ணாடியை முதலில் பயன்படுத்தியவர்கள் மெசபடோமியர்கள்


சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாயபிம்பம்
சமதள ஆடியில் பிம்பம் இடவலமாக தோன்றும்

குழி ஆடி யில் தோன்றும் பிம்பம் மெய்பிம்பம். இது தலைகீழானது.
பொருள் மிக அருகில் இருக்கும்போது குழி ஆடி பொருளை விட பெரிய்ய மாயபிம்பத்தை உருவாக்கும்
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கு குழி ஆடி பயன்படுகிறது

குவி ஆடி எப்போதும்பொருளை விட சிறிய மாயபிம்பத்தை உருவாக்கும். தூரப்பார்வை குறைபாட்டிற்கு குவி ஆடி பயன்படுகிறது

ஆடி இருகுவி ஆடியாகவோ அல்லது சமதள குவி ஆடியாகவோ இருந்தால்,இணையாக வரும் ஒளிக்கற்றை ஆடிகளுக்கு அப்பால் ஒரு இடத்தினில் குவிக்கப்படும். அப்படி குவிக்கப்பட்டால் அவை நேர்மறை குவிஆடி எனப்படும்.ஆடிக்கும் குவிப் புள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் குவியத்தொலைவு( focal length) எனப்படும்.

ஆடி இருகுழி ஆடியாகவோ அல்லது சமதள குழி ஆடியாகவோ இருந்தால்,இணையாக வரும் ஒளிக்கற்றை ஆடிகளை கடந்த பின் பிரிந்து செல்லும்.பாதி ஒளிக்கற்றைகள் ஆடிகளுக்கு முன்னரே ஒரு இடத்தினில் குவிக்கப்படும். அப்படி குவிக்கப்பட்டால் அவை எதிர்மறை குழிஆடி எனப்படும்.ஆடிக்கும் குவிப் புள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் குவியத்தொலைவு(focal length) எனப்படும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ஒன்று வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ளது