வாரன் ஹேஸ்டிங்ஸ்



காலம் : 6 டிசம்பர் 1732 – 22 ஆகஸ்டு 1818
பதவியில் : 20 அக்டோபர் 1773 - 1 பிப்ரவரி 1785
  • பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின், வங்காளத்தின் முதல் தலைமை ஆளுனராக 1773 முதல் 1785 முடிய பணியாற்றியவர்
  • இங்கிலாந்தில், இராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டவர்.
  • 3 சூன் 1756இல் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவின் படையால், கிழக்கிந்திய கம்பெனி படைகள் சிறை பிடிக்கப்பட்டு முர்சிதாபாத்தில் அடைக்கப்பட்டனர். 1757ஆம் ஆண்டில் இராபர்ட் கிளைவ், சென்னையிலிருந்து புறப்பட்டு, வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவை பிளாசிப் போரில் வென்று, மீர் ஜாபரை அரியனையில் ஏற்றி, வாரங்ஹேஸ்டிங்ஸை மீட்டார்.
  • வாரன் ஹேஸ்டிங்ஸ், வங்காளத்தின் ஆளுனராக இருந்த காலத்தில் 1770ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தை எதிர் கொண்டார். பஞ்சத்தில் பத்து மில்லியன் மக்கள் பசிக் கொடுமையாலும், நோயாலும் கொல்லப்பட்டனர்.
  • சார்லச் வில்கின்ச் என்ற அறிஞர் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் உரை எழுதினார்
  • முன்னுரையில் இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்
  • இரட்டைஆட்சிமுறையை ரத்து செய்தார்
ஒழுங்கு முறை சட்டம் -1773
இந்தியாவில் உள்ள கம்பெனி நிர்வாக பகுதிகளை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசு இயற்றிய முதல் சட்டம் எனலாம். இதன்படி தனித்தனியாக நிர்வகிக்கப்பட்ட சென்னை, பாம்பே, பெங்கால் மாகாணங்கள் ஒன்றினைக்கப்பட்டது .  பெங்கால் மாகாணம் அரசின் தலைமை எனப்பட்டது. அதன் கவர்னர் பதவி தலைமை ஆளுநராக ( GOVERNER GENERAL ) உயர்த்தப்பட்டது

பிட் இந்திய சட்டம் 1784
இச்சட்டம் மூலம் பிரிட்டிஷ் இந்திய கம்பெனியின் வணிக மற்றும் அரசாங்க பணிகளை  மேற்பார்வையிடவும், கட்டுபடுத்தவும் தனித்தனி மன்றங்கள் கம்பெனியில்  உருவாக்கப்பட்டன. இதனால் கம்பெனியின் வணிக நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசாட்சி சார்ந்த நடவடிக்கைகளிலும் தனிகவனம் செய்ய வழிவகைசெய்யப்பட்டது .மேலும் கம்பெனியின் இந்திய மாகாணங்களில் முதன் முதலாக ஒர் ஆளுநர் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒர் ஆட்சிமன்றம் இச்சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது

எதிர் கொண்ட சமர்களும் பஞ்சங்களும்:
கர்நாடகப் போர்கள்
வங்காளப் பஞ்சம், 1770
ரோகில்லாப் போர் (1773–1774)
முதல் ஆங்கிலேயே-மராத்தியப் போர் (1777–1783)
1783-1784ஆம் ஆண்டு சாலிசா பஞ்சம்
இரண்டாம் ஆங்கிலேயே-மைசூர் போர் (1780–1784)