வகைப்பாட்டியல்



ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்



மொனிரா: உண்மையான உட்கரு இல்லாதவை (புரோகேரியாட்)

பாக்டீரியா:
பாக்டீரியாவை கண்டு பிடித்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்

நான்கு வடிவத்தில் காணப்படும்:
கோள் வடிவம்
கோல வடிவம்
காற்புள்ளி வடிவம்
சுருள் வடிவம்

தயிரிலுள்ள பாக்டீரியா லேக்டோபேசில்லஸ்

புரோட்டிஸ்டா:உட்கரு கொண்டவை (யூகேரியாட்) யூக்ளினா

யூக்ளினா இரண்டுவகை உணவூட்ட முறையை கொண்டது.இது தாவர,விலங்கு களுக்கிடையே எல்லைக்கோட்டில் உள்ளது

வகைப்பாட்டியலின் வரலாறு:
  • அரிஸ்டாடில் உயிரினங்களை தாவரங்கள்,விலங்குக்ள் என இரண்டு வகைகளாகப் பிரித்தார்
  • மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்ப்டும் ஹிப்போகிரேட்ஸ் மருத்துவ அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்தினார்
  • சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் – ஜான்ரே
  • கரோலஸ் லின்னேயஸ் இருசொல் பெயரிடும்முறையை அறிமுகப்படுத்தினார்.இவரே "வகைப்பாட்டியலின் தந்தை" என அழைக்கப்படுகிறார்
  • முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன.

இருசொற்பெயர்கள் .கா
கரப்பான் பூச்சி பெரிப்பிளானேட்டா அமெரிக்கானா
வீட்டு மஸ்கா டொமஸ்டிகா
தவளை ராணா ஹெக்ஸாடாக்டைலா
புறா - கொலம்பியா லிவியா
மனிதன் ஹோமோ செப்பியன்ஸ்
சிங்கம் - பான்திரா லியோ
நாய் கேனிஸ் லுபுஸ்

செம்பருத்தி   ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்ஸிஸ்
தக்காளி லைக்கோபெர்சிகான்  எஸ்குலண்டம்
உருளை சொலானம் டியூபரோசம்
மா மாஞ்சிஃபெரா இண்டிகா
அரிசி ஒரைசா சட்டைவா
வேர்க்கடலை - ராக்கிஸ் ஹைபோஜியா