செமஸ்போர்டு பிரபு



பதவியில் : 4 April 1916 – 2 April 1921
மாண்டேகு-செமஸ்போர்டு சீர்திருத்தம்:
1918, அதாவது இந்தியருக்கு சில அரசியல் உரிமைகள், சுயராஜ்யத்தை விட சற்றே குறைவாக, கொடுக்க சம்மதித்தனர்.
ரெளலட் சட்டம்:
ரவ்லட் சட்டம் (Rowlatt Act) என்பது பிரித்தானிய இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும். மார்ச் 1919ல் இச்சட்டம் இயற்றபப்ட்டது. விடுதலை/சுயாட்சி வேண்டும் இந்தியர்களை அடக்கவும், காலனிய அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை :
1919 ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தரஷ் ஜாலியன்வாலாபாக் எனுமிடத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக போராடும் விதமாக கூடியிருந்த பொதுமக்களை ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டார், இதில் தோராயமாக 380 பேர் மரணமடைந்தனர், சுமார் 1200 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதிலும் இருந்து வந்த கண்டனங்களை தொடர்ந்து ஆங்கில அரசு "ஹண்டர் கமிஷன்" என்ற குழுவை அமைத்து விசாரணையை நடத்தியது. விசாரணையின் முடிவில் டையரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில் இதற்க்கு முரணாக டயர்க்கு "பஞ்சாப்பின் பாதுகாவலன்" என்று பொறிக்கப்பட்ட வாளும், ஆங்கில ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியும் வழ்ங்கபட்டது.
1920-ஒத்துழையாமை இயக்கம்,கிலாபத் இயக்கம்