இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும. இது கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது
வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்டபின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும், அங்கு வாழ்ந்ததும்.
கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு மீண்டு அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.
தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.உத்தர காண்டம் கம்பராமாயணத்தில் இல்லை.
ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்
தசரதன் இராமாயணத்தில் வரும் அயோத்தியின் மன்னன் ஆவார். இவர் இரகுவம்சத்தைச் சேர்ந்தவர். இவர் இராமரின் தந்தை ஆவார். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். கௌசல்யா, சுமித்ரா, கைகேயி ஆகியோர் இவருடைய மனைவிகள் ஆவர். இராமன் கௌசல்யாவுக்கும், இலட்சுமணனும் சத்ருக்கனனும் சுமித்திரைக்கும், பரதன் கைகேயிக்கும் பிறந்தவர்கள்
மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். சீதைக்கு லவன் என்னும் ஒரு குழந்தை பிறந்தது.குசன் என்ற மற்றொரு குழந்தையும் உண்டு
சுக்கிரீவன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிஷ்கிந்தையை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான். பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.