தாதாபாய் நௌரோஜி
- காலம் : செப்.
4, 1825 – ஜூன்
30, 1917
- ‘சுயராஜ்ஜியம்’ என்ற
கொள்கையை
முதல்முதலில்
கையில்
எடுத்த
பெருமையும்
தாதாபாய்
நவ்ரோஜியையே சேரும்
- தாதாபாய் நவ்ரோஜியின்
‘பிரிட்டிஷ்
கொடுங்கோல்
ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’ (Poverty and Un-British Rule in
India) என்ற
நூல்
ஆங்கிலேயர்
அரசின்
கொடுங்கோன்மையைப்
பற்றிய
உண்மைகளை
உலகிற்கு
உணர்த்தியது
- மூன்று முறை(1886,
1893, 1906) இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- இந்தியாவின் குரல்
(Voice of India) என்ற
பத்திரிகையை
தொடங்கினார்
- இந்திய பெருங்கிழவர்
"Grand old man of India" என
போற்றப்பட்டார்
- 1892-ல் பிரிட்டன்
பாராளுமன்றத்
தேர்தலில்
ஃபின்ஸ்புரியில்
இருந்து
லிபரல்
கட்சி
சார்பாக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல்
ஆசியர்
இவரே.
1895 வரை
உறுப்பினராக
இருந்தார்.
அவர்
கிறிஸ்தவராக
இல்லாததால்
பைபிள்
மீது
சத்தியப்
பிரமாணம்
செய்யவில்லை.
ஜொராஸ்ற்றியன்
மதத்தினரின்
வேதமான
'அவெஸ்டா'
என்ற
நூலின்
மீது
சத்தியப்
பிரமாணம்
செய்ய
அனுமதிக்கப்பட்டார்.