பாரதிதாசன்

·         பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
·          பாரதிதாசன்  குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
·         பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு,இருண்டவீடு,சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி,பிசிராந்தயர்,குறிஞ்சித்திட்டு,இளைஞர் இயக்கம்,தமிழியக்கம்,திருக்குறள் உரை  ஆகியன இவரது குறிப்பிடத் தகுந்த நூல்கள்
·           ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)
·          பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
·          பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
·          “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)