கபிலர்



63. கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்) -- கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)
64. கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
65.
கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
66.
கபிலரைநல்லிசைக் கபிலர்எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
67.
கபிலரைவெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
68.
கபிலரைபுலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன் எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்)

இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.


கபில முனிவர், தொல்கபிலர், கபிலதேவ நயனார் ஆகியோர் இவரினும் வேறானவர் ஆவார். இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி.மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.