பக்தி இயக்கங்கள்
தென் இந்தியாவில் தோன்றின. இராமானந்தர் வட இந்தியாவிற்கு கொண்டு சென்றார். கபீர் மக்களிடையே
பரவசெய்தார்
நாயன்மார்கள்
63 நாயன்மார்கள்
சைவ சமயத்தை நாடெங்கும் பரப்பினர். இவர்களில் அப்பர்(திருனாவுக்கரசர்), சுந்தரர், சம்பந்தர்,
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் முதன்மையானவர்கள்
திருனாவுக்கரசர்,சம்பந்தர்
- தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தவர்கள்
ஆழ்வார்கள்
விஷ்ணுவின்
புகழினை பரப்பியோர் ஆழ்வார்கள் எனப்படுகின்றனர். இவர்களில் நம்மாழ்வார், பெரியாழ்வார்,
ஆண்டாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
ஆழ்வார்கள்
பாடிய 4000பாடல்களை நாதமுனி என்பவர் நாலாயிர திவ்யபிரபந்தம் என்னும் நூலாக தொகுத்துள்ளார்.
பக்தி இயக்கத்தை
தொடங்கிவைத்தவர் சங்கராச்சாரியார். இவர் கேரளாவில், காலடி என்றைடத்தில் பிறந்தார் ஒரே கடவுள் என்னும் அத்வைதக் கொள்கையை பரப்பினார்.
ராமானுஜர் - ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர்.- வைணவப் பெரியார்.இவரின் சீடரே இராமானந்தர்.
கபீர் - இராமானந்தரின் சீடர்.ராமனும் ரகீமும் ஒன்றே என்றார். இவரது போதனைகளின் தொகுப்பு பிஜாகா எனப்படுகிறது
கபீரின் சீடர் குரு நானக் சீக்கிய மதத்தை தோற்றுவித்தார்
பசவர் - வீர சைவமென்னும் பிரிவை தொடங்கினார்.இவரை பின் பற்றியோர் வீர சைவர் அ லிங்காயத்துகள் எனப்பட்டனர்.
சூஃபி இயக்கம்:
பாரசீகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம்.கலீபாவின் போக்கினை கண்டித்தது.
சூஃபி இயக்கத்தின் தலைவர் ஷேக் அ பீர் அ முர்ஷித் எனப்பட்டார்
சூஃபி இயக்கத்தினர் 12 தொகுப்புகளாகசெயல்பட்டனர். இத்தொகுப்பு 'சில்சிலா' எனப்பட்டது
குவாஜா மொய்ன் - உத் - தீன் - சிஸ்டி:
மக்கள் இவரை கரிப் நவாஜ் (ஏழைகளின் காப்பாளர்) என அழைத்தனர்
பாபாஃபரீத் : குவாஜா மொய்ன் - உத் - தீன் - சிஸ்டி:யின் சீடர்
நிஜாம் - உத் - தீன் - அவுலியா :பாபாஃபரீதின் சீடர். மக்கள் இவரை மெஹபொம் -இ-இலாஹி (கடவுளின் அன்பை பெற்றவர்) என அழைத்தனர்
நாகூர் ஆண்டவர் : மீரான்சாகிப் , குவாதிர் வாலி என மக்களால் புகழப்பட்டார்