ராசபுத்திரர்கள்



ராசபுத்திரர்கள் காலம் கிபி647 – கிபி1200
நாட்டினை பல ஜாகிர்களாக பிரித்தனர். அதனை ஆள்பவர்கள் ஜாகிர்தார்கள்.


ராஜபுத்திர இலக்கியங்கள்:
கீத கொவிந்தம் – ஆவிடயனின் பாடல் - ஜெயதேவர்
ராஜதரங்கினி – அரசர்களின் ஆறு - கல்ஹணர்
கதா சரித சாகரம் – கதைகளின் பெருங்கடல் – சோமதேவர்
சித்தார்ந்த சிரோண்மணி – வானவியல் நூல் - பாஸ்கராச்சார்யா

கட்டிடக் கலை:
கஜிராஹோ கொயில்கள்
புவனேஸ்வரத்தில் உள்ள் லிங்கராஜா கோயில்
கோனார்க்கில் உள்ள சூரியக் கோயில்
அபு மலையில் உள்ள தில்வாரா கோயில்

பகுதிகளும் ராசபுத்திரர்களும்:
அவந்தி – பிரதிகாரர்கள் அ கூர்ஜர்கள்
வங்காள்ம் - பாலர்கள் மற்றும் சேனர்கள்
அஜ்மீர்,டெல்லி – சௌகான்கள்
டெல்லி – தோமர்கள்
கனோஜ் – ரத்தோர்கள்
மேவார் – சிசோதியர்கள்அ குகிலர்கள்
பந்தல்கண்ட் – சந்தேலர்கள்
மாளவம் – பரமாரர்கள்
குஜராத் – சோலங்கிகள்

பிரதிகாரர்கள்:
பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர். இவரது தலைநகராக கன்னொஜ் விளங்கியது.

பிரதிகாரர்கள் கூர்ஜர மரபை சார்ந்தவர்கள் ஆவர். எனவே அவர்களை கூர்ஜர பிரதிகாரர்கள் எனவும் அழைப்பர்
பிரதிகார மன்னர்களில் வ்லிமை மிக்கவர் மிகிர போசர்
பிரதிகாரர்களின் கடைசிமன்னர் இராஜ்யபாலா
முகமது கஜினி இராஜ்யபாலா மீதுபோர்தொடுத்தார். அதன் பின்னர் பிரதிகாரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் இவர்களின் ஆட்சியின் கீழிருந்த பாலர்கள்,தோமர்கள்,சௌகாங்கள்,ரத்தோர்கள்,சந்தேலர்கள்,குகிலர்கள்,ப்ரமரர்கள் ஆகியோர் சுதந்திர அரசுகளாக செயல்பட தொடங்கினர்
பிரதிகாரர்கள் பாதுகாப்பு அரண் எனவும் அழைக்கப்படுகிறார்கள்

பாலர்கள்:
வங்காளத்தில் நடந்த குழப்பமான சூழ்னிலையால் பாலர்கள் இனத்தவர்கள் ஒன்று கூடி கோபாலரை வங்காளம் மற்றும் பீகாருக்கு தலைவராக தேர்ந்தெடுத்தனர்
தருமபாலாவிக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
பால்ர் மரபின் கடைசி மன்னர் கோவிந்த பாலர்.சேனர்கள் எழுச்சி பெற்று வங்காளத்தில் புதிய ஆட்சியை ஏற்படுத்தினர்

பிரதிகாரர்கள், பாலர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்கள் இடையே கங்கைச்சமவெளிப்பகுதி மற்றும் கனோஜ்பகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது
 

தோமர்கள்:
கன்னோஜை ஆண்ட பிரதிகாரர்களிடம் திறை செலுத்தியவர்களே தோமர்கள்.
பின்னர் இவர்கள் தனி அரசை ஏற்படுத்தி டெல்லியை ஆண்டனர்
சௌகான்கள் டெல்லியை கைப்பற்றியதும் இவர்கள் மீண்டும் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

சௌகான்கள்:
கன்னோஜை ஆண்ட பிரதிகாரர்களிடம் திறை செலுத்தியவர்களே சௌகான்கள். அஜ்மீரை ஆண்டு வந்த சௌகான்கள்
பின்னர் மாளவ பகுதியை ஆண்டு வந்த பரமாரர்களிடமிருந்து உஜ்ஜைனியையும், தோமர்களிடமிருந்து டெல்லியையும் கைப்பற்றினர்

ரத்தோர்கள்:
பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குபின் கன்னோஜிலிருந்த தெளிவற்ற சூழ்நிலையை பயன்படுத்தி  ரத்தோர்கள் கன்னோஜில் ஆட்சி அமைத்தனர்
கடைசி மன்னர் ஜெயச்சந்திரன் முகமது கோரியிடம் சந்தவார் போரில் கொல்லப்பட்டார்


சந்தேலர்கள்:
பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குபின் பந்தல்க்ண்ட் பகுதியில் ஆட்சியமைத்தவர்கள் சந்தெலர்கள். சந்தேல அரசன் யசோவர்மன், மகோபாவை தலை நகராக நிறுவினார். இவர் குத்புதீன் ஐபக்கிடம் தோல்வி அடைந்தார்.
கஜிராஹொவில் பல கோயில்களை கட்டினர்இவற்றில் புக்ழ் பெற்றது கந்தர்யமகாதேவர் ஆலயம்

சந்தேல மரபைத் தொடங்கியவர் யசோவர்மன்
கடைசி சந்தேல மன்னர் பாராமால்
தலைநகரம் - மகோபா

சிசோதியர்கள் அ குகிலர்கள்:
சித்தூரை தலை நகராக கொண்டு ஆட்சி செய்த சிசோதிய மரபை தொடங்கியவர் பாபாரவால் . இவர் வழிவந்த ராணாரத்தர்சிங்கை அலாவுதீன் கில்ஜி தோற்கடித்தார். இதை அறிந்த ராணாரத்தர்சிங்கின் மனைவி ராணி பத்மினி ஜவஹர் வழக்கத்தின் படி தீயில் குதித்து இறந்தார்.
ராணா சங்கா, மகாராணா பிரதாப் ஆகியோர் முகலாயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

பரமாரர்கள்:
மாளவப் பகுதியை தாராவை தலை நகராக கொண்டு ஆண்டு வந்தனர்.
அலாவுதீன் கில்ஜியிடம் வீழ்ந்தனர்.