திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில்
அடங்கியது.
153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கணிமேதாவியார் என்பவர்
இதனை இயற்றினார்.இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.
இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது.
இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.
1. குறிஞ்சி 1-31 வரை : 31 பாடல்கள்
2. நெய்தல் 32-62 வரை : 31 பாடல்கள்
3. பாலை 63-92 வரை : 30 பாடல்கள்
4. முல்லை 93-123 வரை :31 பாடல்கள்
5. மருதம் 124-153 வரை :30 பாடல்கள்